Thangalaan Troll: ஒன்னுமே புரிலப்பா! சப்டைட்டில் போடுங்க ப்ளீஸ்.. ரஞ்சித்துக்கு கோரிக்கை - ட்ரோல் செய்யப்படும் தங்கலான்-vikram starrer thangalaan gets mixed response and trolled by fans - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thangalaan Troll: ஒன்னுமே புரிலப்பா! சப்டைட்டில் போடுங்க ப்ளீஸ்.. ரஞ்சித்துக்கு கோரிக்கை - ட்ரோல் செய்யப்படும் தங்கலான்

Thangalaan Troll: ஒன்னுமே புரிலப்பா! சப்டைட்டில் போடுங்க ப்ளீஸ்.. ரஞ்சித்துக்கு கோரிக்கை - ட்ரோல் செய்யப்படும் தங்கலான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 16, 2024 12:56 AM IST

விக்ரமின் தங்கலான் படத்துக்கு கலவையான விமர்சனம் வெளியாகி வரும் நிலையில் கதை இல்ல, ஒன்னுமே புரில, சப்டைட்டில் போடுங்க என ரசிகர்கள் படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.

Thangalaan Troll: ஒன்னுமே புரிலப்பா! சப்டைட்டில் போடுங்க ப்ளீஸ் ட்ரோல் செய்யப்படும் தங்கலான்
Thangalaan Troll: ஒன்னுமே புரிலப்பா! சப்டைட்டில் போடுங்க ப்ளீஸ் ட்ரோல் செய்யப்படும் தங்கலான்

ட்ரோல் செய்யப்படும் தங்கலான்

விக்ரமின் நடிப்பை பற்றி ரசிகர்கள் சிலாகித்து பேசி வருகின்றனர். அத்துடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி போன்றோரின் நடிப்பையும் பாராட்டி வருவதோடு, மேக்கிங், ஜி.வி. பிரகாஷ் இசை படம் குறித்து பேசப்பட்டாலும், கதை புரியவில்லை, திரைக்கதை தொய்வாக இருக்கிறது, வசனங்கள் புரியவில்லை எனவும் குறைகளையும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

விக்ரம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியபோதிலும், மோசமான கதையம்சம், ஆவரேஜ் படமாக மாற்றியிருப்பதாக படம் பார்த்த பலரும் கூறுகிறார்கள்.

கே ஜி எஃப் ஐ காலி பண்றோம்னு சொல்லி தங்கலான் படம் எடுத்து காமெடி பண்ணி இருக்காங்க என் ரசிகர்கள் ஒருவர் ட்ரோல் செய்துள்ளார்.

அதேபோல் பிரபல விமர்சகரான பரத்வாஜ் ரங்கன், பா. ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் விக்ரம் மூர்க்கமான கேரக்டரில் தோன்றி ரசிக்க வைத்துள்ளார். பல சுவாரஸ்யமான விஷயங்கள் இருந்தபோதிலும், அவை ஒன்றாக அமையவில்லை. எமோஷனலாக கனெக்ட் ஆகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தங்கலான் படத்தின் பாசிடிவ் விஷயமாக தியேட்டர் ஏசி, பாப்கார்னும், நெகடிவ் ஆக மொத்தம் படமும் இருப்பதாக உச்சகட்ட ட்ரோல் செய்துள்ளார் ரசிகர் ஒருவர்

தங்கலான் கதை என்ன?

வட ஆற்காடு வேப்பூர் கிராமத்தில் தங்கலான் முனி (விக்ரம்) தன்னுடையை மனைவி கங்கம்மா, ( பார்வதி) குழந்தைகள் மற்றும் தன் சனத்தோடு, தனக்கான நிலத்தில் பயிர் செய்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறான். இதனை பார்த்து பொறுக்காத ஊர் மிராசு, சூழ்ச்சி செய்து, அவனையும் அவனது மகன்களையும் பண்ணை அடிமையாக பணி அமர்த்துகிறார். இதற்கிடையே வரும் ஆங்கில துரை கிளவ்ன் (டேனியல்) அந்தக் காட்டில் இருக்கும் தங்கத்தை எடுக்க ஊராரின் உதவியை கேட்கிறார். மிராசின் அடிமையாக இருப்பதை விட, துரைக்கு உதவி செய்து கூலி வாங்கி, ரோஷத்தோடு வாழ நினைக்கிறான் தங்கலான். இதனையடுத்து அவனுடைய மகன் அசோகன் மற்றும் ராமானுஜம் வழியில் அந்தனன் ( பசுபதி) உள்ளிட்டோர் செல்கின்றனர்.

ஒரு கட்டத்தில் அவனுடன் ஊராரும் சேர்ந்து கொள்கின்றனர். ஆனால், அங்கிருக்கும் தங்கத்தை தன் உயிராக பாதுகாத்து நிற்கின்றனர் ஆரத்தியும் ( மாளவிகா) அவனது குழுவும். பொன்னை நெருங்க வரும் நபர்களின் உயிர்களை காவு வாங்கும் அவர்களை மீறி, இறுதியில் தங்கலான் குழு தங்கத்தை எடுத்தார்களா? இல்லையா? அதன் பின்னர் என்ன ஆனது என்பது படத்தின் கதை.

தங்கலான் முனி கதாபாத்திரத்திற்கு தன்னுடைய உடல், பொருள், ஆவி என வழக்கம் போல, தன்னை மொத்தமாக கொடுத்து இருக்கிறார் விக்ரம். தங்கலானை அடக்கும் ராணியாகவும், அன்பை அரட்டுத்தனமாக காட்டுபவளாகவும் கங்கம்மா கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார் நடிகை பார்வதி. அவளுக்கும், தங்கலானுக்கும் இடையே நடக்கும் ரொமான்ஸ் அழகோ அழகு.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.