தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vijaysethupathi Starrer Kv Anand Film Kavan Completed 7 Years Of Its Release

7 Years of Kavan: டிவி சேனல்கலில் டிஆர்பிக்காக செய்யப்படும் தில்லு முல்லுகளை வெளிக்காட்டிய கவண்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 31, 2024 06:20 AM IST

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் மிகவும் குறுகிய காலத்தில் தயாரான படம் கவண். விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்று, பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய படமாக இருந்தது.

கவண் திரைப்படம்
கவண் திரைப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

அரசியல் த்ரில்லர் படமான இதில் கே.வி. ஆனந்த் - விஜய் சேதுபதி முதல் முறையாகா கூட்டணி அமைத்தனர். தமன்னா ஹீரோயினாக நடிப்பதக இருந்து பின்னர் கால்ஷீட் பிரச்னையால் மடோனா செபாஸ்டீன் கதாநாயகியாக கமிட்டானார். கே.வி. ஆனந்த் இயக்கிய அயன் படத்தில் வில்லனாக மிரட்டிய ஆகாஷ்தீப் சைகல் தமிழில் மீண்டும் இந்த படத்தில் கம்பேக் கொடுத்தார்.

முக்கிய வேடத்தில் டி.ராஜேந்தர்

மற்ற இயக்குநர்கள் இயக்கத்தில் நடிப்பதை பொரும்பாலும் தவிர்ப்பதுடன், தான் இயக்கும் படங்களில் மட்டுமே நடிப்படை வழக்கமாக்கி கொண்டிருந்தார் நடிகரும், இயக்குநருமான டி. ராஜேந்தர். இயக்குநர் கே.வி. ஆனந்த கேட்டுக்கொண்டதாலும், கதாபாத்திரம் பிடித்த காரணத்தாலும் டி. ராஜேந்தர் இந்த படத்தில் ஒப்புக்கொண்டார். அதன் வேறு இயக்குநர் இயக்கத்தில் டி. ராஜேந்தர் நீண்ட நாள்களுக்கு பிறகு நடித்த படமாக இது அமைந்தது.

விக்ராந்த், தக்‌ஷனா ராஜேந்திரன், போஸ் வெங்கட், பாண்டியராஜன், ஜெகன் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். போஸ் வெங்கட் முதல் முறையாக வில்லனாக அரசியல்வாதி வேடத்தில் நடித்திருப்பார். அவரது நடிப்பும் வெகுவாக பேசப்பட்டது. 

டிவி மீடியாக்களில் இருக்கும் போலித்தன்மை, டிஆர்பிக்காக அவர்கள் செய்யும் விஷயங்கள், அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து ஊடக அறத்தை மீறி செயல்படுவது போன்ற விஷயங்களை தோலுரித்து காட்டும் விதமாக படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும்.

விறுவிறுப்பான காட்சிகள்

இயக்குநர் கே.வி. ஆனந்த் தனது படங்களுக்கு தூய தமிழ் பெயர்களை வைப்பதை வழக்கமாக கடைப்பிடித்து வந்தார். அதன்படி இந்த படத்துக்கு கவண் என்ற தூய தமிழில் டைட்டில் வைத்ததோடு, தனது மற்ற படங்களை போல் விறுவிறு காட்சியமைப்புகளும், தொய்வில்லாத திரைக்கதையுடன் படத்தை உருவாக்கியிருப்பார்.

டிவி மீடியாக்களில் டிஆர்பிக்காகவும் தில்லுமுல்லுகளை போட்டுடைக்கும் விதமான காட்சிகள், விருதை பெறுவதற்கு சிபாரிசு செய்துகொள்ளும் காட்சியில் அவரே தோன்றுவது என பல்வேறு விஷயங்களை பகடை செய்து காட்சி படுத்தியிருப்பார்.

அதேபோல் அரசியல்வாதிகள் புரொமோட் செய்ய மீடியாக்கள் என்ன மாதிரியான வேலைகள் செய்கின்றன போன்றவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை

கே.வி. ஆனந்த் படங்களில் வழக்கமாக ஹாரிஸ் ஜெயராஜ் இசைமைப்பார். ஆனால் கவண் படத்தை மிகவும் குறுகிய காலத்தில் கே.வி. ஆனந்த் இயக்கி முடிந்தார். இதையடுத்து தனது படத்துக்கு வழக்கமாக இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜை விடுத்து ஹிப் ஹாப் தமிழா ஆதியை இசையமைப்பாளராக்கினார்.

அவரது இசையில் படத்தின் பாடல்கள், பின்னணி இசை ரசிகர்களை கவர்ந்தது. ஆக்சிஜன், ஹாப்பி நியூ இயர் பாடல்கள் ஹிட்டடித்தன.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் மிகவும் குறுகிய காலத்தில் தயாரான இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றதுடன், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை பெற்று ஹிட்டானது. பொழுபோக்கு அம்சங்களுடன் கூடிய த்ரில்லர் படமான கவண் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் ஆகிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்