தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vijayakanth Starrer Pulan Visaranai Completed 33 Years Of Its Release

33 Years of Pulan visaranai: விஜயகாந்துக்கு திருமண பரிசாக கிடைத்த புலன் விசாரணை! புதிய மேக்கிங் ஸ்டைலை உருவாக்கிய படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 14, 2024 05:30 AM IST

விஜயகாந்த் திரை வாழ்க்கையை மாற்றியமைத்த முக்கிய படமாக புலன் விசாரணை இருந்து வருகிறது. இந்த படத்தின் மேக்கிங் ஸ்டைல் தமிழ் சினிமாவில் புது வித ட்ரெண்டை உருவாக்கியது.

புலன் விசாரணை படத்தில் விஜயகாந்த்
புலன் விசாரணை படத்தில் விஜயகாந்த்

ட்ரெண்டிங் செய்திகள்

திரைப்பட கல்லூரி மாணவரான ஆர்.கே. செல்வமணியை நம்பி விஜயகாந்த் நடித்த இந்த படம் அவருக்கு மிக பெரிய பிரேக் கொடுத்தது என்றே கூறலாம். இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் விஜயகாந்த் - பிரேதலதா திருமணம் நடைபெற்றது.

புலன் விசாரணை தனது திருமண கிப்டாக கொடுத்திருப்பதாக அறிமுக இயக்குநர் ஆர்.கே. செல்வமணியை வெகுவாக பாராட்டியுள்ளார். ஏனென்றால் விஜயகாந்துக்கு தொடர்ச்சியாக தோல்வி படங்கள் அமைய, புலன் விசாரணையும் அந்த லிஸ்டில் இணைந்தால் அவரது சினிமா எதிர்காலம் பாதிக்கப்படும் என்கிற சூழலில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

படத்தில் ரூபினி, எம்என் நம்பியார், சரத்குமார், ராதா ரவி உள்பட பலரும் நடித்திருப்பார்கள். வில்லனாக ஆனந்த் ராஜ் நடித்திருப்பார். இவரது கதாபாத்திரம் ஆட்டோ ஷங்கர் கேடர்டரை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கும்.

தமிழில் பல்வேறு த்ரில்லர் படங்கள் வந்திருந்தாலும், புலன் விசாரணை மேக்கிங் ஸ்டைல் புது விதமான ட்ரெண்டை அமைத்து கொடுத்தது. இதுவே படத்தை வெற்றியடை செய்யவும் காரணமாக அமைந்தது.

கங்கை அமரன் பாடல் வரிகள் எழுத இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்து வரவேற்பை பெற்றன. குறிப்பாக பின்னணி இசை க்ரைம் த்ரில்லர் படத்துக்கான பாணியில் மிரள வைக்கும் விதமாக இருக்கும்.=

1990இல் பொங்கல் வெளியீடாக வந்த இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. பின்னாளில் புலன் விசாரணை இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. விஜயகாந்த் திரை வாழ்க்கையை மாற்றியமைத்த முக்கிய படமாக இருந்து வரும் புலன் விசாரணை வெளியாகி இன்றுடன் 34 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.