Vijayakanth: விஜயகாந்த் இறப்பு முன்பு நடந்த சம்பவம் என்ன? விஜய பிரபாகரன் ஓபன் டாக்!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு சிறப்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமானார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 19 ஆம் தேதி நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் நினைவேந்தல் கூட்டம் சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று(ஜன.19) நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், சரத்குமார், ராதாரவி, நாசர், விக்ரம், கார்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயம் ரவி, சத்யராஜ், தேவயானி, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட நட்சத்திரங்கள் மேடையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விஜய பிரபாகரன், “சின்ன வயதில் இருந்தே நான் என் முகத்தை கண்ணாடியில் பார்த்ததை விட அப்பாவின் முகத்தை தான் தான் நிறைய முறை பார்த்து வளர்ந்து இருக்கிறேன். அப்பா என்றால் நான் மிகவும் எமோஷனல் ஆகிவிடுவேன். கேப்டன் எங்கேயும் போகாமல் நம்முடன் தான் இருக்கிறார்.
அவர் இறந்தது முதல் எந்த மீடியாவிலும் பேசவில்லை. இது தான் முதல் முறை. எந்த நடிகர் சங்க நிகழ்ச்சியிலும் நானும், சண்முக பாண்டியனும் கலந்து கொண்டதில்லை. எங்களுடைய முதல் நிகழ்ச்சியே இது தான். அப்பா இல்லாமல் பேசும் முதல் நிகழ்ச்சியும் இதுதான்.
சிறு வயதில் இருந்தே அடுத்தவர்களுக்கு கொடுத்து வாழ தான் அப்பா சொல்லி கொடுத்து இருக்கிறார். அவர் இல்லாமல் என்ன நடக்கும் என அனைவரும் யோசிப்பீர்கள். உங்களுக்காக தான் எங்களை விட்டு சென்று இருக்கிறார். அவரின் கனவை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.
கடந்த 10 வருடமாக கேப்டன் உடல்நிலை சரியில்லாமல் எவ்வளவோ கஷ்டப்பட்டு இருந்தார். வேறு யாராக இருந்தாலும் அதை தாங்கி இருப்பார்களா என தெரியவில்லை. இந்த 71 வயது வரையிலும் விஜயகாந்த் கஷ்டப்பட்டு நின்று இருக்கிறார் என்றால் அதற்கு அவரின் மன தைரியம் மட்டுமே காரணம்.
யூடியூப் சேனல்களில் அப்பா இறப்பதற்கு முன்பு அவருக்கு நினைவு இல்லை என நிறைய தவறாக சொல்லப்பட்டது. அவர் இறப்பதற்கு 2 நாட்கள் முன்னாடி கூட வீட்டில் வேலை செய்த 2 பணியாளர்களிடம் தான் நடிச்ச படங்களின் பாட்டை போட சொல்லி கேட்டு ரசித்து இருக்கிறார். அவர்கள் சொன்ன பிறகு தான் எனக்கு தெரிந்தது. சிசிடிவி பார்க்கும் போது தான், அப்பா அந்த பாட்டை கேட்டு ரசித்து தாளம் போட்டது தெரிந்தது.
டிசம்பர் 26 ஆம் தேதி அவரை மருத்துமனையில் சேர்த்தோம். வந்து விடுவார் என நினைத்தோம். . அப்பாவின் மறைவுக்கு வந்த அனைவருக்கும், இந்த நிகழ்வை நடத்தும் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் “ என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்