தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vijay Varma Salary In Bigg Boss 7 Tamil

Vijay Varma: இரண்டு முறை பிக் பாஸ் வந்த விஜய் வர்மா வாங்கிய சம்பளம் என்ன?

Aarthi Balaji HT Tamil
Jan 11, 2024 01:15 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் வர்மா வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் வர்மா
விஜய் வர்மா

ட்ரெண்டிங் செய்திகள்

இப்போது பிக் பாஸ் தமிழ் 7 இறுதி வாரத்தில் உள்ளது, கமல் ஹாசனுடன் வார இறுதியில் விசித்ராவின் வெளியேற்றம் நிகழ்ச்சியின் முதல் 6 இறுதிப் போட்டியாளர்களை உறுதி செய்தது. பிக் பாஸ் தமிழ் 7 அதன் முதல் 6 இறுதிப் போட்டியாளர்களாக தினேஷ், விஜே அர்ச்சனா, மாயா கிருஷ்ணன், விஷ்ணு விஜய், மணிச்சந்திரா மற்றும் தினேஷ் இருந்தனர்.

இது ஒரு கடினமான சண்டையாக இருந்த போதிலும், பிரபலமான ரியாலிட்டி ஷோ கிராண்ட் ஃபைனலுக்கு முன்னதாக வாரத்தின் நடுப்பகுதியில் எவிக்‌ஷன் என்ற ஒரு குண்டை வீசியது. பிக் பாஸ் தமிழ் 7ல் இருந்து பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் விஜய் வர்மா இதுவரை குறைந்த வாக்குகளைப் பெற்றதால் அவர் வெளியேற்றப்பட்டுவிட்டார்.

ஆனால் எலிமினேஷனுக்குப் பிறகு அவர் ஒரு பெரிய தொகையை வீட்டிற்கு எடுத்து சென்று இருப்பதாக சொல்லப்படுகிறது. பிக் பாஸ் தமிழ் 7ல் 18 போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்த விஜய், ஒரு எபிசோடுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக பெற்று உள்ளார்.

அவர் அங்கு 21 நாட்கள் இருந்தபோது (ரூ. 3.15 லட்சம் சம்பளமாக) வாங்கினார். பின்னர் எலிமினேட் செய்யப்பட்டு 56 ஆவது நாளில் வைல்டு கார்டு போட்டியாளராக ரீ-என்ட்ரி கொடுத்தார். வைல்டு கார்டு போட்டியாளராக அவர் மேலும் 45 நாட்கள் நிகழ்ச்சியில் இருந்தார் (ரூ. 6.75 லட்சம்) சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் 7 இல் அவரது மொத்த வருமானம் ரூ 9.9 லட்சம் என கூறப்படுகிறது. இதற்கிடையில், விஜய்யின் வெளியேற்றத்துடன், பிக் பாஸ் தமிழ் 7 அதன் முதல் 5 இறுதிப் போட்டியாளராக மாயா கிருஷ்ணன், விஜே அர்ச்சனா, விஷ்ணு விஜய், மணிச்சந்திரா மற்றும் தினேஷ் ஆகியோர் உள்ளனர். ஜனவரி 14 அன்று நடைபெறும் இறுதிப்போட்டியின் போது வெற்றியாளர் கோப்பையை யார் கைப்பற்றுவார்கள் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel
பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.