ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த தருணம்! சிறகடிக்க ஆசையில் மாட்டப்போகும் ரோகிணி! டிஆர்பி எகிறுமா?
விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான சிறக்கடிக்க ஆசையின் முக்கியமான தருணமான மனோஜ் மற்றும் ரோகிணி குடும்பத்தினரிடம் மாட்டிக்கொள்ளக் கூடிய நிகழ்வு நடக்கப் போகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட் மிகவும் விறுவிறுப்பாக சென்றுள்ளது. விஜய் டிவியின் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பல உள்ளனர். இந்த சீரியல் தான் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. அந்த அளவிற்கு சிறகடிக்க ஆசை சீரியல் பல ரசிகர்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த கதையில் வரும் மூன்று ஜோடிகள் தான் இந்த கதையின் முக்கிய கதாபாத்திரங்கள். இவர்கள் மூவரை வைத்து தான் இந்த கதை நகர்கிறது.
பிடிபடாமல் இருக்கும் ரோகிணி
கதையின் நாயகனாக கருதப்படும் முத்து கார் டிரைவர் ஆக இருக்கிறார். மேலும் இவரது மனைவி மீனா பூக்கட்டும் வேலை செய்து வருகிறார். முத்துவின் அண்ணனான மனோஜ் அதிகm பொய் பேசக்கூடிய திருட்டியில் ஈடுபடக்கூடிய ஒரு நபராக இருந்து வருகிறார். இவரது மனைவி ரோகிணியும் இவருக்கு எந்த விதத்திலும் சளைக்காத அளவிற்கு பொய் கூறி அவரை திருமணம் செய்து அடிக்கடி திருட்டிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் பல தவறுகளை செய்து வரும் ரோகிணி இது வரை எந்த தவறுக்காகவும் மாட்டிக்கொள்ள வில்லை.
ரோகிணி பிடி படாமல் இருந்து வருவதே சீரியல் ரசிகர்களுக்கு தொய்வை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இந்த சீரியலில் நீண்ட நாட்களாக மறைக்கபட்ட உண்மை ஒன்று நாளை வெளிவரப்போகிறது. அதற்கு மனோஜின் முன்னாள் காதலியே காரணமாக இருக்கப் போகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ் மற்றும் ரோகிணி வாங்கிய வீடு ஏமாற்றப்பட்ட வீடு எனத் தெரியவந்துள்ளது. மேலும் நாளைய சூப்பரான டுவிஸ்ட்க்கான புரோமோவும் வெளியாகி உள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த தருணம்
நீண்ட காலமாக தனது முதல் திருமணத்தை மறைத்து குழந்தை இருப்பதையும் மறைத்து மனோஜை திருமணம் செய்திருக்கும் ரோகினி, பல தவறுகளை செய்து வருகிறார். தனது தந்தை குறித்தான பொய்கள் மனோஜிற்கு தொழில ஆரம்பிக்க கிடைத்த பணம் என அனைத்திலும் முற்றிலும் பொய்யாக இருந்து வரும் ரோகிணி அனைவரும் முன்பும் மாட்டிக்கொள்ள வேண்டும் என்பதே சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலின் ப்ரோமோ வெளி வந்தாலே அனைவரும் கமெண்டில் ரோகிணியை சிக்க வைக்க வேண்டும் எனவே தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது ரோகினி மற்றும் மனோஜ் ரோகிணியின் தந்தை தொழில் தொடங்க பணம் கொடுத்ததாக சொன்ன பணம் மனோஜின் முன்னாள் காதலி எடுத்துக்கொண்டு ஓடிய மனோஜின் தந்தையின் பென்ஷன் பணம் என தெரியப் போகிறது. இன்றைய எபிசோடில் முத்து மனோஜின் முன்னாள் காதலியை அடையாளம் காணுகிறார். மேலும் அவரிடம் இந்த பணம் குறித்தான கேள்விக்கு நான் முன்னதாகவே மனோஜ் மற்றும் ரோகினிடம் இந்த பணத்தை தந்துவிட்டதாகவும் கூறுகிறார். மேலும் இதனை தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் வந்து கூறுமாறு முத்து கேக்கும்போது அதற்கு மனோஜின் காதலியும் ஒப்புக் கொள்கிறார். இந்த நிலையில் நாளைய எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகினி குடும்பத்தினர் முன்னிலையில் மாட்டிக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் சுவாரஸ்யமாக சீரியல் செல்வதால் இந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலின் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
டாபிக்ஸ்