அடையாளம் தேடும் திறமை.. சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10.. உள்ளே நுழைந்த ஏழை பிஞ்சுகள்! - யார் இவர்கள்?
விஜய் டிவி வழங்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தனது 10 ஆவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவையில்லை. சிறந்த மழலை பாடகரை தேடும் முயற்சியாக அமையும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பின்னணி கொண்ட குழந்தைகள் தங்களது திறமையை வெளிப்படுத்துவார்கள். அதில் நன்றாக பாடும் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கிடையில் போட்டி நடத்தப்படும்.
அந்தப்போட்டியில் வெல்லும் போட்டியாளருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். கூடவே இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பிரபலம் கலைநிகழ்ச்சிகள், திரைத்துறையில் பாடும் வாய்ப்புகள் உள்ளிட்டவற்றையும் வழங்கும் என்பதால், இந்த நிகழ்ச்சியில் பாடும் திறமை கொண்ட தங்களுடைய குழந்தைகளை பாட வைக்க பெற்றோர் போட்டி போடுவர். அந்தப்போட்டியும், குழந்தைகளின் பாடும் திறமையும்தான் இந்த நிகழ்ச்சியை அடுத்தடுத்த சீசன்களுக்கு அழைத்து சென்றது.