Serial Trp: டிஆர்பியில் சர்ரென மேலே ஏறி வரும் சிறகடிக்க ஆசை.. சரியும் சன் டிவியின் கோட்டை..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Serial Trp: டிஆர்பியில் சர்ரென மேலே ஏறி வரும் சிறகடிக்க ஆசை.. சரியும் சன் டிவியின் கோட்டை..

Serial Trp: டிஆர்பியில் சர்ரென மேலே ஏறி வரும் சிறகடிக்க ஆசை.. சரியும் சன் டிவியின் கோட்டை..

Malavica Natarajan HT Tamil
Published Feb 20, 2025 06:19 PM IST

Serial Trp: டிஆர்பி புள்ளிப் பட்டியலில் பல மாதங்களாக டாப் 5 இடங்களை தக்க வைத்து வந்த சன் டிவி சீரியல்களை பின்னுக்குத் தள்ளி விஜய் டிவியின் சீரியல் ஒன்று உள்ளே நுழைந்துள்ளது.

Serial Trp: டிஆர்பியில் சர்ரென மேலே ஏறி வரும் சிறகடிக்க ஆசை.. சரியும் சன் டிவியின் கோட்டை..
Serial Trp: டிஆர்பியில் சர்ரென மேலே ஏறி வரும் சிறகடிக்க ஆசை.. சரியும் சன் டிவியின் கோட்டை..

ஒவ்வொரு வாரமும் டிவி சீரியல்கள் எந்த அளவுக்கு ஓடியுள்ளது என டி.ஆர்.பி ரேட்டிங் வெளியாகும். கடந்த வாரம் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்புகளின் அடிப்படையில் டிஆர்பி புள்ளிப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில், முதல் 10 இடங்களைப் பெற்ற சீரியல்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

மூன்று முடிச்சு

சன் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் சீரியலான மூன்று முடிச்சு, டாப் 10 டிஆர்பி பட்டியலில் 3ம் இடத்திலிருந்து அதிரடி கதைக்களத்தால் இந்த வாரம் முதல் இடம் பிடித்துள்ளது. இது டிஆர்பி புள்ளி வரிசையில் 9.22 புள்ளிகள் பெற்றுள்ளது.

சிங்கப்பெண்ணே

சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சிங்கப் பெண்ணே சீரியல் டிஆர்பியில் 9.21 புள்ளிகள் பெற்று டாப் 10 சீரியல்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து இறங்கி 2ம் இடத்தை பிடித்துள்ளது.

கயல்

சன் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் கயல். சில மாதங்களாக டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்து வந்த கயல் தற்போது அதன் புள்ளிகள் எல்லாம் குறைந்து டாப் 10 பட்டியலில் 9.14 புள்ளிகளுடன் 3ம் இடம் பிடித்துள்ளது.

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் 10ம் இடத்திலிருந்து படிப்படியாக முன்னேறி தற்போது டாப் 10 சீரியல்களின் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியல் 8.25 டிஆர்பி புள்ளிகள் பெற்றுள்ளது.

மருமகள்

சன் டிவியில், இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் மருமகள். இந்த மருமகள் சீரியல் டிஆர்பியில் 8.15 புள்ளிகளைப் பெற்று 4ம் இடத்திலிருந்து 5ம் இடத்திற்கு சரிந்தது.

அன்னம்

சன் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் அன்னம். இந்த சீரியல் 7.33 புள்ளிகளுடன் டிஆர்பியில் 6ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியல் எதிர்நீச்சல் சீரியலின் 2ம் பாகம் ஆகும். இது வெளியான நாளில் இருந்தே அதிக பார்வையாளர்களைப் பெற்று டாப் 10 டிஆர்பி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த சீரியல் தற்போது 7.01 புள்ளிகள் பெற்று 7ம் இடத்தில் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை சீரியல் டிஆர்பியில் 6.63 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் உள்ளது.

ராமாயணம்

சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ராமாயணம் சீரியல் டிஆர்பியில் 6.61 புள்ளிகள் பெற்று 9ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் பாக்கியலட்சுமி. இது டிஆர்பியில் 6.52 புள்ளிகள் பெற்று 10ம் இடத்தில் உள்ளது.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.