இந்திய தொலைக்காட்சியில் முதன்முறையாக.. அமரன் முதல் அரண்மனை வரை.. பொங்கலுக்கு டிவியில் வரிசை கட்டும் திரைப்படங்கள்!
பொங்கல் பண்டிகையன்று டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி இடத்தை வகிக்கும் விஜய்டிவி, பண்டிகை காலங்களில், அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் ஒளிப்பரப்புவது வழக்கமான ஒன்றுதான்; அந்த வகையில், இந்த 2025 பொங்கல் அன்று விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
பொங்கல் 2025 சிறப்பு திரைப்படங்கள்:
வாழை
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் பொங்கல் பண்டிகையன்று ஒளிப்பரப்பாக இருக்கிறது. இயக்குநரின் வாழ்க்கையில் இருந்து சில பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு உணர்ச்சிகரமான திரைப்படமாக இந்தப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பள்ளி மற்றும் வாழை தோட்ட வேலைகளை சமாளிக்கும் சிறுவனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இப்படம், கிராமப்புற வாழ்வின் சிக்கல்களையும் குழந்தைகளின் மனவலிமையையும் நெகிழ்ச்சியாக காட்டியது. இந்தத்திரைப்படம் ஜனவரி 14ம் தேதி 12.30 மணிக்கு ஒளிப்பரப்பாக இருக்கிறது.