‘மனிதநேயத்தை பின்பற்றும் இஸ்லாமிய சொந்தங்கள் வந்தது மகிழ்ச்சி’: இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் பேச்சு
இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு வெள்ளை கைலி, வெள்ளை சட்டை, தொப்பியுடன் விஜய் வருகை தந்து கலந்துகொண்டார்.

‘மனிதநேயத்தை பின்பற்றும் இஸ்லாமிய சொந்தங்கள் வந்தது மகிழ்ச்சி’: இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் பேச்சு
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய சந்திர நாள்காட்டியின் ஒன்பதாவது மாதமான ஹிஜ்ரியில், இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு மாதமாகக் கடைப்பிடிக்கின்றனர். இந்நிலையில் ரமலான் நோன்பு கடந்த 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது.
அதில் த.வெ.க சார்பில் நோன்பு கஞ்சியும், 2 ஆயிரம் நபர்களுக்காக மட்டன் பிரியாணியும் தயார் செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
