பதற்றத்தில் போட்டியாளர்கள்.. விசில் அடித்து கொண்டாடிய பார்வையாளர்கள்.. பிக்பாஸ் இன்றைய எபிசோட்
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்பதை விஜய் சேதுபதி அறிவிக்க இருந்த சமயத்தில் பார்வையாளர்கள் விசிலடித்து கொண்டாடி உள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 இன்றுடன் 3வது வாரத்தை நிறைவு செய்கிறது. இந்த சமயத்தில் பிக்பாஸ் வீட்டிலுள்ள ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்த போட்டியாளர் யார் என்பதை விஜய் சேதுபதி அறிவிக்க உள்ளார். இதற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
3வது வார எலிமினேஷன்
பிக்பாஸ் வீட்டின் 3வது வாரத்தில், போட்டியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறுவது என் மனதிற்கு வருத்தமாக உள்ளது. நீங்கள் உங்கள் விளையாட்டை தீவிரமாக விளையாடினால் மக்கள் உங்களை பாதுகாப்பார்கள் என அறிவுரை வழங்கினார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் குறித்து அறிவிக்க உள்ள சமயத்தில், வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டனர். அப்போது, அவர் அவர்கள் கஷ்டம் அவர் அவர்களுக்கு என விஜய் சேதுபதி விமர்சித்தார். அந்த சமயத்தில் பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி விசில் அடித்து கொண்டாடினர். இதையும் அவர் கிண்டல் செய்திருப்பார்.
நாமினேஷன் லிஸ்ட்
பிக்பாஸ் வீட்டின் 3வது வாரத் தொடக்கத்தில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில், போட்டியாளர்கள் எதிரணியில் உள்ளவர்களை தான் நாமினேட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு போட்டியாளர்கள் யாரை வேண்டுமானாலும் நாமினேட் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து, பிக்பாஸ் வீட்டிலுள்ள முத்துக்குமரன், சௌந்தர்யா, அருண், சத்யா, அன்ஷிதா, தர்ஷா, ஜாக்குலின், பவித்ரா என 5 பெண் போட்டியாளர்களும், 3 ஆண் போட்டியாளர்களும் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தனர்.
நாமினேஷன் பாஸ்
இந்நிலையில், தங்கள் வீட்டிலுள்ள போட்டியாளர்களை காப்பாற்றுவதற்கான நாமினேஷன் ஃபிரி பாஸ் போட்டி நடத்தப்பட்டது. அதில் பெண்கள் அணி வெற்றி பெற்றனர். இதன் பின் அணியினருடன் கலந்து ஆலோசித்து இந்த வார எலிமினேஷனில் இருந்து பவித்ராவை காப்பாற்றி உள்ளனர். இதனால், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் அந்த நபர் யார் என்பதைப் பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
சரமாரி கேள்வி எழுப்பும் விஜய் சேதுபதி
முன்னதாக வெளியான ப்ரோமோவில், போட்டியாளர்களை விஜய் சேதுபதி சரமாரியாக கேள்வி கேட்கிறார்.கடந்த வாரம் நடந்த ஹோட்டல் டாஸ்க்கில் போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பாக கேள்விகளை கேட்கிறார். அதற்கு நேரடியாக பதில் கூறாமல் போட்டியாளர்கள் மழுப்பும் வகையில் பதில் அளிக்கின்றனர்.
தனிநபர் தாக்குதல்
பிக்பாஸில் தற்போது மூன்றாவது வார இறுதி வந்து விட்டது. ஆனால் கடந்த மூன்று வாரங்களாக ஒரு நூறு நாள் பிக்பாஸில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் அரங்கேற்றி விட்டன. இந்நிலையில் இந்த வார நாட்களில் பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்க் எனும் ஒரு டாஸ்க்கை கொடுத்து இருந்தார்.
இந்த டாஸ்க்கில் தான் தனி நபரை குறி வைத்து எதிரணிகள் விளையாடியதாக விஜய் சேதுபதி கூறுகிறார். இந்த டாஸ்க்கில் முதலில் பெண்கள் அணியினர் ஹோட்டல் பணியாளர்களாகவும், ஆண்கள் அணியினர் வாடிக்கையாளர்களாகவும் விளையாடினர். இதில் பவித்ரா ஹோட்டல் மேனேஜர் ஆக விளையாடினார்.
பவித்ராவை குறி வைத்த ஆண்கள் அணி
குற்றச்சாட்டுகளை அடுக்கி அவரை மேனேஜர் என்ற இடத்தில் இருந்து விளக்குவதையே நோக்கமாக வைத்து விளையாடினார். மேலும் ஆண்கள் அணியினர் ஹோட்டல் பணியாளர்களாக விளையாடிய போது மேனேஜர் ஆக இருந்த முத்துவை பெண்கள் அணி குறி வைத்து விரட்டினர். மேலும் சௌந்தர்யா மேனேஜர் ஆக இருந்த போதும் இதே நிகழ்ந்தது.
பூசி மொழுகும் போட்டியாளர்கள்
இந்த சீசன் தொடங்கி முதல் வார இறுதி எபிசோட்டில் இருந்தே தொகுப்பாளர் விஜய் சேதுபதி கேட்கும் எந்த கேள்விகளுக்கும் போட்டியாளர்கள் நேரடியாக பதில் அளிக்க வில்லை. சுற்றி வளைத்து தாங்கள் கூற வந்ததை தெளிவாக கூறாமல் பதிலளித்து வந்தனர். இதனை மீண்டும் மீண்டும் விஜய் சேதுபதி சுட்டிக் காட்டி வந்தார். ஆனால் யாரும் வெளிப்படையாக பேசுவதாக இல்லை. இதனால் விஜய் சேதுபதி கோபமடைந்தார்,

டாபிக்ஸ்