மகாராஜா படத்தை ஓவர் டேக் செய்த விடுதலை 2.. படம் வெளியான 3 நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மகாராஜா படத்தை ஓவர் டேக் செய்த விடுதலை 2.. படம் வெளியான 3 நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு?

மகாராஜா படத்தை ஓவர் டேக் செய்த விடுதலை 2.. படம் வெளியான 3 நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு?

Malavica Natarajan HT Tamil
Dec 23, 2024 09:00 AM IST

விடுதலை பாகம் 2 திரைப்படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஜா படத்தை ஓவர் டேக் செய்த விடுதலை 2.. 3 நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு?
மகாராஜா படத்தை ஓவர் டேக் செய்த விடுதலை 2.. 3 நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு?

இருப்பினும், பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பொறுத்தவரை, படம் மந்தமாக இருப்பதாகத் தெரிய வருகிறது. படக்குழு எதிர்பார்த்த அளவுக்கு இப்படம் வசூலைக் குவிக்கவில்லை எனத் தெரிகிறது.

பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை வெளியிடும் டிராக்கர் சாக்னில்க்கின் கூற்றுப்படி, வெற்றி மாறன் இயக்கிய விடுதலை 2 படம் வெளியான முதல் நாளில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ .7 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. தமிழில் ரூ.6.6 கோடியும், தெலுங்கில் ரூ.40 லட்சமும் வசூலித்ததாக தெரிகிறது. வார இறுதி நாட்களில் படத்திற்கான முன்பதிவு அதிகரித்து இருப்பினும் மீண்டும் வார நாட்களில் வசூல் வேகமாக குறையுமோ என்ற கேள்வியும் எழுகிறது.

இந்நிலையில் விடுதலை திரைப்படம் வெளியாகி 3ம் நாளான நேற்று, தமிழ்நாட்டில் 6.76 கோடி ரூபாயும், தெலுங்கில் ரூ. 50 லட்சமும் வசூலித்ததாக தெரிகிறது. இதையடுத்து படம் வெளியான முதல் நாள் இந்திய அளவில் 22.46 கோடி வசூலித்ததாகத் தெரிகிறது. இந்த வசூல், விஜய் சேதுபதியின் விடுதலை 1 மற்றும் மகாராஜா படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை 2 விமர்சனம்

விடுதலை பாகம் 1 மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும்பாலான ரசிகர்களை ஈர்க்கவில்லை எனத் தெரிகிறது. படம் வெளியான முதல் நாளில், படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்க சில காட்சிகளை நீக்கி இருக்கலாம்.

 படத்தில் பல இடங்களில் வரும் வசனங்கள் நீளமாக இருக்கிறது. இது படத்தை தொய்வாக்குகிறது என பலரும் கூறி வந்தனர். இன்னும் சிலர், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அரசியல் படமாக இது இருக்கும். 

இந்தப் படத்தில் நடித்ததற்காக நிச்சயம் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும். அப்படி தேசிய விருது கிடைக்கவில்லை என்றால் அது அந்த விருதுக்கு தான் அசிங்கம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம்

எல்ரெட் குமார், வெற்றிமாறன் தயாரிப்பில் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம் விடுதலை 2. வெற்றிமாறன் ஒரு பிரிவினைவாத குழுவின் தலைவருடன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை எடுத்துள்ளார்.

ஸ்கோர் செய்த நடிகர்கள்

மேலும் இந்தப் படத்தில் நடித்த பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ், ராஜீவ் மேனன், போஸ் வெங்கட், வின்சென்ட் அசோகன், அனுராக் காஷ்யப், இளவரசு, பாலாஜி சக்திவேல், சரவண சுப்பையா, தமிழ், சேத்தன், ஆர்யன், மூணார், ரமேஷ், பாவெல் நவகீதன், சர்தார் சத்யா, கென் கருணாஸ் ஆகியோர் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

விடுதலை 2 ஓடிடி

விடுதலை பாகம் 2-ன் ஓடிடி உரிமையை ஜீ 5 ஓடிடி தளம் வாங்கியுள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் ஓடிய பிறகு, ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். திரையரங்குகளில் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு அதாவது ஜனவரி இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் படம் ஓடிடியில் ஒளிபரப்பாகலாம். தியேட்டரில் படம் நன்றாக ஓடி வசூலைக் குவித்தால் ஓடிடி ஸ்ட்ரீமிங் தாமதமாகும் வாய்ப்புகள் உள்ளன.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.