Simbu And Vijay Sethupathi: விஜய் சேதுபதியை கட்டாயப்படுத்தி அதை செய்ய வைத்த சிம்பு-vijay sethupathi talks about simbu - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Simbu And Vijay Sethupathi: விஜய் சேதுபதியை கட்டாயப்படுத்தி அதை செய்ய வைத்த சிம்பு

Simbu And Vijay Sethupathi: விஜய் சேதுபதியை கட்டாயப்படுத்தி அதை செய்ய வைத்த சிம்பு

Aarthi Balaji HT Tamil
Jan 29, 2024 09:06 AM IST

Simbu And Vijay Sethupathi: விஜய் சேதுபதியை கட்டாயப்படுத்தி சிம்பு ஒரு செயல் செய்து இருக்கிறார்.

விஜய் சேதுபதி - சிம்பு
விஜய் சேதுபதி - சிம்பு

பெரியவர் சேனாபதி (பிரகாஷ் ராஜ்)  அதிர்ஷ்டவசமாக ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பிக்க கதை தொடங்கும். டான் உயிருக்கு துணிச்சலான முயற்சியை மேற்கொண்டது யார் என்பதில் குற்ற உலகமும், போலீசாரும் குழப்பத்தில் உள்ளனர். 

தந்தையின் காலத்திற்குப் பிறகு அவரது தந்தை இடத்தை யார் கைப்பற்றுவது என்பதில் குடும்பத்திற்குள் மகன்களுக்கு இடையே போட்டி உள்ளது. வரதன் (அரவிந்த் ஸ்வாமி) தன்னை வாரிசாகக் காண்கிறார், அதே நேரத்தில் இரண்டாவது மகன் தியாகு அரியணையை வெளிப்படையாகப் பார்க்கும் ஒரு குளிர் ரத்தம் கொண்ட கணக்கீட்டு ஆளுமை. யாரையும் அதிகம் பொருட்படுத்தாத மூன்றாவது மகன் (சிம்பு) தனது உரிமைகோரலுக்குத் திரும்புகிறார், அதே நேரத்தில் வரதனின் குழந்தை பருவ நண்பரான ரசூல் (விஜய் சேதுபதி) உதவி செய்வார். 

செக்க சிவந்த வானம், படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று அப்போதே வெளியாகி இணையத்தில் வைரலாக பேசப்பட்டது. அந்தப் புகைப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதிக்கு ஒரு ஸ்பூனால் சாப்பாடு ஊட்டிவிடுவது போல் இருந்தது. இதை பார்த்து பலரும் அவர்களின் அன்பும், நட்பும் மிகவும் அழகாக இருந்தது என பாராட்டினார்கள்.

இது தொடர்பாக முன்பு விஜய் சேதுபதி Behindwoods Tv, யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “ நான் செக்க சிவந்த வானம், படப்பிடிப்பு தளத்திலேயே சிம்புவிடன் சொன்னேன் வேண்டாம் என்று. ஆனால் சிம்பு தான் கேட்கவே இல்லை. என்னை கட்டாயப்படுத்தி வேண்டாம் என சொல்லியும் சாப்பாடு ஊட்டினார். 

சாப்பாடு ஊட்டி எல்லாம் புகைப்படம் எடுக்க நான் வேண்டாம் தலைவா என சொன்னேன். அது எப்படி வேண்டாம் என சொல்லாம்? சிம்பு தான், இல்லை நான் ஊட்டிவிட்டு புகைப்படம் எடுத்து போடுவேன் என சொல்லி செய்தார். இரண்டு வாய் அவர் ஊட்டிவிட்டார். அவருடன் படப்பிடிப்பு தளத்தில் இருந்தது மிகவும் ஜாலியாக இருக்கும்.

சிம்பு மற்றும் அவரின் தந்தை டி. ராஜேந்தர் இருவருடன் நடித்துவிட்டேன். இருவருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமையான விஷயம். சிந்திக்கும் முறை தான். வேகமாக யோசிப்பார்கள். திறமை இருவருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமையான விஷயம். அதிகமாகவே இருவருக்கும் இருக்கும் “ என்றார்.

மேலும் விஜய் சேதுபதியும், டி. ராஜேந்தரும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான, கவண் படத்தில் இணைந்து நடித்து இருந்தார்கள். இருவரும் காம்போவில் வெளியான இந்த படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

நன்றி: Behindwoods Tv

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.