இது ரொம்ப அநியாயமா இருக்கு.. பாதி கூட இல்லையே? பிக் பாஸுக்கு விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் இவ்வளவு தானா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இது ரொம்ப அநியாயமா இருக்கு.. பாதி கூட இல்லையே? பிக் பாஸுக்கு விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் இவ்வளவு தானா?

இது ரொம்ப அநியாயமா இருக்கு.. பாதி கூட இல்லையே? பிக் பாஸுக்கு விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் இவ்வளவு தானா?

Aarthi Balaji HT Tamil
Oct 06, 2024 03:34 PM IST

சம்பள விஷயத்தில் விஜய் சேதுபதி காட்டிய நேர்மையின்மை குறித்து ரசிகர்கள் சிலர் கவலை தெரிவித்து வருகின்றனர் . கமல் ஹாசன் சம்பளத்தில் பாதி கூட விஜய் சேதுபதிக்கு கொடுக்கவில்லை என்பதே அதற்கு காரணம்.

இது ரொம்ப அநியாயமா இருக்கு.. பாதி கூட இல்லையே? பிக் பாஸுக்கு விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் இவ்வளவு தானா?
இது ரொம்ப அநியாயமா இருக்கு.. பாதி கூட இல்லையே? பிக் பாஸுக்கு விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் இவ்வளவு தானா?

கடந்த 7 ஆண்டுகளாக விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று ( அக். 6 ) தொடங்கி உள்ளது. இதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் முதல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் வரை ஒருவர் பின் ஒருவராக தகவல்கள் வெளியாகி வருவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். 

விஜய் சேதுபதி அழகாக நடத்துவாரா?

இந்த முறை பிக்பாஸ் சீசன் 8 ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் புதுமுகங்கள் மட்டுமல்ல. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகும் தொகுப்பாளரும் புதுமுகம் தான். இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசனை போல விஜய் சேதுபதி அழகாக நடத்துவாரா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிக் பாஸ் ப்ரோமோவில் கூட விஜய் சேதுபதிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நிகழ்ச்சியை எப்படி நடத்துவது என்று அறிவுரை கூறுவது போல் இருந்தது . 

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளரான விஜய் சேதுபதி , நடிகர் கமல் ஹாசனுடன் விக்ரம் படத்தில் நடித்திருப்பதால் , நடிகர்கள் என்பதைத் தாண்டி கடந்த சில வருடங்களாக கமலுக்கும், விஜய் சேதுபதிக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. 

ஆலோசனை வழங்கிய கமல் ஹாசன்

இந்நிலையில் பிக் பாஸ் குறித்து விஜய் சேதுபதிக்கு, கமல் ஹாசன் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார் . அதேபோல் கமல் ஹாசன் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சில அரசியல் கருத்துக்கள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டதால் இந்த முறை விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் இது அரசியல் சார்பற்ற நிகழ்ச்சியாக இருக்கலாம். அதே சமயம், கமல் ஹாசன் சிறந்த புத்தகங்கள் மற்றும் நாவல்கள் பற்றி பேசுவது போல, விஜய் சேதுபதி புத்தக வாசிப்பை ஊக்குவிப்பாரா அல்லது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் ஒரு சமூக கருத்தை கொண்டு வருவாரா ? என்று தெரியவில்லை. 

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது . அடுத்தடுத்த சீசன்களில் சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே வந்த கமல் ஹாசன், இறுதியாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 130 கோடி  ரூபாய் வாங்கினார். ஆனால், சம்பள விஷயத்தில் விஜய் சேதுபதி காட்டிய நேர்மையின்மை குறித்து ரசிகர்கள் சிலர் கவலை தெரிவித்து வருகின்றனர் . கமல் ஹாசன் சம்பளத்தில் பாதி கூட விஜய் சேதுபதிக்கு கொடுக்கவில்லை என்பதே அதற்கு காரணம்.

விஜய் சேதுபதி சம்பளம்

விஜய் சேதுபதிக்கு 15 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே விஜய் சேதுபதி தோன்றுவார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.