Maharaja OTT : நெட்ஃபிளிக்ஸில் புதிய சாதனை; கதறும் ஹிந்தி படங்கள்.. மாஸ் காட்டும் மகாராஜா- விஷயம் என்ன தெரியுமா?-vijay sethupathi maharaja is now the most viewed indian film on netflix so far beating crew laapataaladies - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maharaja Ott : நெட்ஃபிளிக்ஸில் புதிய சாதனை; கதறும் ஹிந்தி படங்கள்.. மாஸ் காட்டும் மகாராஜா- விஷயம் என்ன தெரியுமா?

Maharaja OTT : நெட்ஃபிளிக்ஸில் புதிய சாதனை; கதறும் ஹிந்தி படங்கள்.. மாஸ் காட்டும் மகாராஜா- விஷயம் என்ன தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Aug 21, 2024 12:58 PM IST

Maharaja: மகாராஜா திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 100 கோடியை தாண்டி வசூல் செய்தது. திரையரங்கில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு காரணமாக, படம் எப்போதும் ஓடிடியில் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

Maharaja: நெட்ஃபிளிக்ஸில் புதிய சாதனை; கதறும் ஹிந்தி படங்கள்.. மாஸ் காட்டும் மகாராஜா!- விஷயம் என்ன தெரியுமா?
Maharaja: நெட்ஃபிளிக்ஸில் புதிய சாதனை; கதறும் ஹிந்தி படங்கள்.. மாஸ் காட்டும் மகாராஜா!- விஷயம் என்ன தெரியுமா?

 

மகாராஜா பெற்ற புள்ளிகள்!
மகாராஜா பெற்ற புள்ளிகள்!

அதிகாரப்பூர்வமாக அறிவித்த நெட்ஃபிளிக்ஸ்

இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி வெளியானது. வெளியான அன்றைய நாளே ஓடிடியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தப்படம், தற்போது புதிய சாதனையை படைத்து இருக்கிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் தளமே வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, ஜூலை 12 ஆம் தேதி வெளியானாலும், ஜூலை 8 முதல் ஜூலை 14 வரையிலான வெளியான படங்களுடன் போட்டி போட்டு முதல் வாரத்தில் 3.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற மகாராஜா திரைப்படம் அந்த வார ஹிட் லிஸ்டில் 4ம் இடத்தை பிடித்தது. அடுத்த வாரத்தில், மேலும் பார்வையாளர்கள் அதிகரித்து 6.1 மில்லியனை பெற்று, அந்த வார ஹிட் லிஸ்டில் 3ம் இடத்தை பிடித்தது.

அதிக பார்வையாளர்களை பெற்ற இந்திய திரைப்படம்

அதற்கடுத்த வாரத்தில் 3.6 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற மகாராஜா திரைப்படம், அந்த வார ஹிட் லிஸ்டில் 4ம் இடத்தை பிடித்தது. அதற்கடுத்த வாரம் 2.6 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற மகாராஜா 5ம் இடத்தை பிடித்தது. அதற்கடுத்த வாரம் 1.8 மில்லியன் பார்வையாளர்களை பெற்று 5ம் இடத்தை தக்க வைத்துக்கொண்ட மகாராஜா திரைப்படம், கடந்த வாரத்தில் 1.3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று 8ம் இடத்தை பிடித்து இருக்கிறது.

இந்த வரவேற்பின் மூலம் இதுவரை மொத்தமாக 18.9 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற மகாராஜா திரைப்படம், அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற க்ரூ, லாபாதா லேடீஸ் உள்ளிட்ட படங்களின் பார்வையாளர்களை விட, அதிக பார்வையாளர்களை ஈர்த்து, இந்த வருடத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற இந்திய திரைப்படம் என்ற சாதனை பெற்று இருக்கிறது.

 

முன்னதாக, மகாராஜா திரைப்படத்தின் கதை திருட்டுக்கதை என்று தயாரிப்பாளர் ஒருவர் குற்றம் சாட்டி இருந்தார்.

அவர் பேசும் போது, “மகாராஜா திரைப்படம் தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படத்தின் கதை என்னுடைய கதையில் இருந்து திருடப்பட்டது. 2020 ம் ஆண்டே, இந்தக்கதை என்னிடம் வந்து பேசப்பட்ட கதை. உடனே நான் நித்திலனை, இந்தப்படத்தை குறும்படமாக எடுத்து வரச்சொன்னேன். அதற்கான பணத்தையும் கொடுத்தேன். அவரும் எடுத்து வந்தார். படம் சிறப்பாக இருந்தது. அதன் பின்னர் அதனை படமாக்குவதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.

இதற்கிடையே, என்னுடைய படமான அத்தியாயம் 1 படத்தை எடுப்பதற்கான வேலைகளை ஒருபக்கம் செய்து கொண்டிருந்தேன். அதற்கான நடிகர்களுக்கான கால்சீட்களை வாங்கி வைத்திருந்தேன். ஆனால், குறுக்கே மழை வந்து விட்டது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டேன். பின்னர் மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவதற்கான வேலைகளில் இறங்கினேன். ஷூட்டிங் தொடங்குவதற்கு 2 நாட்கள் முன்னதாக, என்னுடைய படக்குழுவினர், என்னிடம் வந்து, உங்களது கதை, மகாராஜா என்ற பெயரில் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறினர்.

தடுக்க ஒரு கூட்டமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதையடுத்து நான் படத்தை பார்க்கச் சென்றேன். படத்தை பார்த்த போது, அது முழுக்க முழுக்க என்னுடைய கதை என்பது அப்பட்டமாக தெரிந்தது. இந்தக்கதையை நான் பதிவு செய்து வைத்த காரணத்தால், நான் சங்க தலைவர்களான பாக்யராஜ் மற்றும் பாரதிராஜாவிடம் இது குறித்து கேட்டு, மனு அளித்தேன். ஆனால், என்னை போன்ற தயாரிப்பாளர்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக அங்கு ஒரு கூட்டமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நடிகர் விஷால் உள்ளிட்ட சில நண்பர்கள் சிறு தயாரிப்பாளர்களை வளரவிடுங்கள் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அப்படியான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. வேறு சிலரே வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக்கதையினுடைய அம்சத்தை வைத்து பார்க்கும் போது, விஜய்சேதுபதி நன்றாக நடித்திருந்தார். தயாரிப்பாளரும் படத்தை நன்றாக தயாரித்திருந்தார். ஆனால் இயக்குநர் என்ற அந்த நாய் கதையை திருடிவிட்டது. அதற்கு ஆதாரம் உள்ளது.

நான் தான் பெயர் வைக்க வேண்டும்.

நான் பெற்ற பிள்ளைக்கு நான் தான் பெயர் வைக்க வேண்டும். சமூகத்தில் வாழ்த்தெரியாதவன் என் கதையை திருடிவிட்டான். ஒரு மனிதனை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும் என்பதற்காக கூட இதனை செய்து விட்டார்கள். இது என்னுடைய இரண்டாவது படமாக செய்ய இருந்தேன். படத்தின் கதையை சொன்ன போது, என்னை ஆசீர்வாதம் செய்தது நடிகர் ந்சார்லி. விரும்பி நடிக்க வந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். இந்தப்படத்தின் கதை சென்னையின் திரையரங்க உரிமையாளர் ஸ்ரீதர் மூலம் சென்று இருக்கிறது என்பது என்னுடைய நம்பிக்கை.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.