தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maharaja Collection: ஆறு நாளில் மகாராஜா படத்தின் வசூல் என்ன ? - விஜய் சேதுபதி வென்றாரா?

Maharaja Collection: ஆறு நாளில் மகாராஜா படத்தின் வசூல் என்ன ? - விஜய் சேதுபதி வென்றாரா?

Aarthi Balaji HT Tamil
Jun 20, 2024 09:13 AM IST

Maharaja: உலகம் முழுவதும் 2000 திரையரங்குகளில் வெளியான மகாராஜா பட 6 நாளில் எவ்வளவு வசூல் செய்து இருக்கிறது என்ற விவரத்தை பார்க்கலாம்.

ஆறு நாளில் மகாராஜா படத்தின் வசூல் என்ன ? - விஜய் சேதுபதி வென்றாரா?
ஆறு நாளில் மகாராஜா படத்தின் வசூல் என்ன ? - விஜய் சேதுபதி வென்றாரா?

விக்ரம் படத்தில் கேங்ஸ்டராக நடிப்பதாகட்டும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரமும் தனக்கு என ஒரு ஸ்டைலை நிரூபித்து உள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மகாராஜா படத்தின் வசூல் விவரம் குறித்த தகவலை பார்க்கலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

விஜய் சேதுபதியின் 50 வது படம்

தனது 50 வது படமாக விஜய் சேதுபதி நடித்து இருக்கும் மகாராஜா ஜூன் 14 ஆம் தேதி வெளியாகி உள்ளது. மேலும் இது பார்வையாளர்களுக்கு மீண்டும் தனது புதிய பக்கத்தைக் காட்டும் படம் என்று விஜய் சேதுபதி நம்புகிறார்.

இந்தப் படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் இயக்கி இருக்கிறார். பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப் மகாராஜா படத்தில் முக்கிய ரோலில் நடித்து உள்ளார். இந்தப் படத்தை எழுதி இயக்கியவர் நித்திலன் சாமிநாதன். தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி.

ஒளிப்பதிவு இயக்குனராக தினேஷ் புருஷோத்தமன் பணிபுரிந்து உள்ளார். பி அஜனீஷ் லோக்நாத் இசையை கவனித்து உள்ளார். டிரைலரிலேயே இசை மிரட்டுகிறது.

பாடல் வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து எழுத, எடிட்டராக பிலோமின் ராஜ் பணிபுரிந்துள்ளார். இந்த ஆக்ஷன் படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு பணிபுரிந்துள்ளார். வசனத்தை நித்திலன் சாமிநாதன், ராம் முரளி ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர்.

மகாராஜா படத்தில்

மகாராஜா படத்தில் மம்தா மோகன்தாஸ், நட்டி (நட்ராஜ்), பாரதிராஜா, அபிராமி, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

விமர்சனம்

மகாராஜா படத்த பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், "நிதிலன் ஒரு மெதுவான த்ரில்லரை நமக்கு வழங்கியுள்ளது. முதல் பாதியில், பல கதாபாத்திரங்கள் விளையாடுவதைக் காண்கிறோம், அவை பொருத்தமற்றதாகத் தோன்றுகின்றன, ஆனால் நீங்கள் இடைவேளைக்கு வரும்போது, விளையாட்டில் பெரிய விஷயங்கள் இருப்பதை நீங்கள் உணர்கிறீர்கள். இரண்டாம் பாதியில் தான் நீங்கள் புள்ளிகளை இணைக்கத் தொடங்குகிறீர்கள், மகாராஜா ஏன் லட்சுமியைக் கண்டு பிடிப்பதற்கான இடைவிடாத பணியில் உறுதியான மனிதராக இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்கத் தொடங்குகிறீர்கள். அதற்கு பின் என்ன நடந்தது என்பதே கதை.

மகாராஜா வசூல்

இந்நிலையில் மகாராஜா படம் கடந்த ஆறு நாட்களில் உலகளவில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து உள்ளது.

இந்த வாரத்தின் இறுதிக்குள் இன்னும் பல மடங்க்ய் வசூல் சாதனை மகாராஜா படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்