தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vijay Sethupathi And Gautham Karthik Starrer Oru Nalla Naal Paathu Solren Completed 6 Years Of Its Release

6 Years of Oru Nalla Naal Paathu Solren: சீரியஸ் நடிப்பில் சிரிக்க வைத்த விஜய் சேதுபதி! தமிழில் ஒரு வித்தியாச முயற்சி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 02, 2024 07:10 AM IST

விஜய் சேதுபதிக்கு சறுக்கலாக அமைந்திருந்தாலும் தமிழ் சினிமாவில் வித்தியாச முயற்சியை முன்னிருத்திய படமாக ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் அமைந்திருக்கும்.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதி
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதி

ட்ரெண்டிங் செய்திகள்

விஜி சந்திரேசேகர், ரமேஷ் திலக், டேனி போப் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். பேண்டஸி கலந்த புதுமையான கதை களத்தில் அமைந்திருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி எமன் என்ற பழங்குடியின மக்களின் தலைவனாக நடித்திருப்பார்.

கல்லூரி மாணவனாக வரும் கெளதம் கார்த்திக் காமெடியில் கலாட்டா செய்திருப்பார். ஆந்திராவில் மனித நடமாட்டம் இல்லாத மலை காட்டில் வாழ்ந்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்த விஜய் சேதுபதி மற்றும் அவரது இன மக்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். விஜய் சேதுபதியின் முறைபெண்ணாக நிகரிகா, கெளதம் இடையே காதல் மலர்கிறது. விஜய் சேதுபதிக்கு திருமணம் செய்து வைக்க நிகரிகா அழைத்து வரப்படுகிறார். அவர் பின் தொடர்கிறார் கெளதம் கார்த்திக். இறுதியில் விஜய் சேதுபதி - நிகரிகா திருமணம் நடந்ததா, கெளதம் கார்த்திக் - நிகரிகா சேர்ந்தார்களா என்பதை அவல நகைச்சுவை சொட்ட சொட்ட சொல்லியிருப்பார்கள்.

கதை களம் மட்டுமில்லாமல், திரைக்கதை பாணியிலும் புதுமையாக இருக்கும் இந்த படத்துக்கு பிளாக் காமெடி டச் பல இடங்களிலும் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியிருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் ஓவர் டோஸ் ஆகும் விதமாகவே அமைந்திருந்தது.

விஜய் சேதுபதி சீரியஸாக செய்யும் ஒவ்வொரு விஷயமும் வயிறை புன்னாக்கும் விதமாக சிரிக்க வைக்கும் காட்சிகளாகவே இருக்கும். இதே ரகம்தான் கெளதம் கார்த்திக் தொடர்பான காட்சிகளிலும். விஜய் சேதுபதியை ஒன்சைடாக காதலிக்கும் காயத்ரி தொடர்பான காட்சியும் சிரிப்பை வரவழைக்கும் விதமாக இருக்கும்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஹேய் ரீங்காரா என்ற பாடல் மனதில் நிற்கும் விதமாக இருந்தன. மற்ற பாடல்களும் சிறப்பாகவே இருந்தன.

தொடர் ஹிட் கொடுத்து வந்த விஜய் சேதுபதிக்கு இந்த படம் சறுக்கலாக அமைந்திருந்தாலும், தனது வழக்கமான நடிப்பு திறமையால் கவனத்தை ஈர்த்திருப்பார். தமிழ் சினிமாவில் புதுமைான முயற்சியாக வெளிவந்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் ஆகிறது.

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இருக்கும் இந்த படம் வித்தியாச பாணி சினிமாவை பார்க்க விரும்புவோருக்கான படமாக அமைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.