TVK Vijay: வெள்ளை சட்டையில் என்ட்ரி.. தொடங்கியது மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா!
TVK Vijay: நீண்ட நேரமாக விஜய் வருகைக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் வெள்ளை சட்டையில் அசத்தலான என்ட்ரி கொடுத்தார்.

TVK Vijay: நடப்பாண்டின் 10 மற்றும் 12 வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஊக்கத்தொகை இன்று ( ஜூன் 28) வழங்கப்படுகிறது.
முதல் மூன்று இடங்கள்
தொகுதி வாரியாக முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு விஜய், ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழை வழங்க உள்ளார்.
இந்த முறை பொது தேர்வுகளில் அதிக மதிபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. இன்றும் ( ஜூன் 28) , ஜூலை 3 ஆம் தேதியும் இந்த விழா நடக்க உள்ளது.
தனியார் மண்டபத்தில் விழா
அதன் படி, முதல் கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று ( ஜூன் 28) நடைபெறுகிறது.
5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை
அரியலூர், கோவை, தருமபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, தேனி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்றைய விழாவில் பங்கேற்கின்றனர். மாணவர்கள் வரும் போது பேனா, செல்போன், புத்தகம் ஆகியவை கொண்டு செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வெள்ளை சட்டையில் அசத்தலான என்ட்ரி
நீண்ட நேரமாக விஜய் வருகைக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் வெள்ளை சட்டையில் அசத்தலான என்ட்ரி கொடுத்தார். தனக்கு மரியாதை கொடுத்த அனைவரையும் பாசமாக அமருங்கள் என சொல்லி அமர வைத்தார். மேலும் விஜய்யை நேரில் பார்த்த குஷியில் மாணவர்களும் அவரது குடும்பத்தினரும் கூச்சல் ஈட்டனர். அத்துடன் மாணவர்கள் மத்தியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.
உணவு பட்டியல்
விஜய் விருது வழங்கும் விழாவில் மாணவர்கள் மட்டும் குடும்பத்தினருக்கு வழங்க இருக்கும் மதிய உணவு பட்டியல் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
சாதம், வடை, அப்பளம், அவியல், வெற்றிலை பாயாசம், மோர், மலாய் சான்விச், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, அவரை மணிலா பொரியல்ம் உருளை காரகறி, வத்தக் குழம்பு, கதம்ப சாம்பார், ஆணியன் மணிலா, தக்காளி ரசம் என தடபுடல் விருந்து தயார் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த மாணவர்கள் சந்திப்பு விழாவில் அம்பேத்கரையும், பெரியாரையும் படியுங்கள் என மாணவர்களுக்கு விஜய் அறிவுரை வழங்னார்.
ஆனால் இந்த முறை அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் மாணவர் சந்திப்பில் விஜய் என்ன பேச போகிறார் என தெரிந்து கொள்ள அனைவரும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்