தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay : விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இனி அரசியல் தான் என்று சொன்ன விஜய்.. அடுத்தடுத்து மூன்று படங்கள் வருதாமே..

Vijay : விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இனி அரசியல் தான் என்று சொன்ன விஜய்.. அடுத்தடுத்து மூன்று படங்கள் வருதாமே..

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 20, 2024 05:33 PM IST

Vijay : விஜய் அவர்களின் அறுபத்து ஒன்பதாவது படம் டிராப் ஆகவில்லை என்றும் விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று ரசிகர்களுக்கு முக்கியமான செய்தியைப் பகிர்ந்து உள்ளார். அவரின் அடுத்த அறுபத்து ஒன்பதாவது படம் ஜூலை மாதம் இறுதியில் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இனி அரசியல் தான் என்று சொன்ன விஜய்.. அடுத்தடுத்து மூன்று படங்கள் வருதாமே..
விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இனி அரசியல் தான் என்று சொன்ன விஜய்.. அடுத்தடுத்து மூன்று படங்கள் வருதாமே..

Vijay : விஜய் என்றாலே தமிழ் திரைப்பட உலகின் வசூல் சக்கரவர்த்தி எனலாம். இவருக்கு தமிழ் திரைப்பட உலகம் தாண்டியும் பல்வேறு மொழிகளிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இவர் நடித்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளிவரும் போதே படம் சம்பந்தப்பட்ட வியாபாரம் முடிந்து விடும். படம் திரைக்கு வரும் நாளில் ரசிகர்கள் தியேட்டர்களில் திருவிழாவாக மாற்றி கொண்டாடி விடுவார்கள்.

இளைஞர்கள் மத்தியில் மட்டும் அல்ல. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கும் பிடித்தமான ஹீரோ. ஐநூறு கோடி வசூல் இலக்கு என்பதெல்லாம் இவர் படங்களுக்கு பெரிய விஷயம் இல்லை. மூன்று நான்கு நாட்களில் வசூலை வாரிக் குவித்து அவரது பழைய ரிக்கார்டுகளை அவரே முறியடிப்பார்.

இந்த நிலையில்தான் நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று இனி தான் சினிமாவில் நடிக்க போவதில்லை என்றும் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து மக்களுக்கு சேவை செய்ய முடிவெடுத்து இருப்பதாக அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் உருவாக்கி உள்ளார். பலருக்கும் இது மகிழ்ச்சி அளித்த போதிலும் அவர் நடிப்பால் ஈர்க்கப்பட்ட ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சி தான். தமிழக அரசியலுக்கும் தமிழ் திரைப்பட துறைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. திரைப்பட உலகில் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் போதே இனி நடிக்க போவதில்லை என்ற இவரது அறிவிப்பு பல ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்தது.

விஜய்யின் 69 ஆவது படம் டிராப்?

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் அறுபத்தி எட்டாவது படமான கோட் என்ற படத்தோடு அவ்வளவு தான் இனி விஜய் நடிக்க மாட்டார் என்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவலை இருந்தது. ஆனாலும் அறுபத்து ஒன்பதாவது படமே கடைசி யாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில் தயாரிப்பு நிறுவனமும் அமைதியானதால் விஜய்யின் அறுபத்து ஒன்பதாவது படம் டிராப் ஆகி விட்டது என்று ஒரு தகவல் பரவியது.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சூழலில் தான் விஜய் ரசிகர்களுக்கு முக்கியமான மிகவும் மகிழ்ச்சியான செய்தியை மூத்த பத்திரிகையாளர் மற்றும் சினிமா துறையில் மக்கள் தொடர்பாளருமான வி.கே.சுந்தர் அவர்கள் தான் நடத்தி வரும் வி.கே.சுந்தர் அப்டேட்ஸ் என்ற யூடியூப் சேனலில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

விஜய் அவர்களின் அறுபத்து ஒன்பதாவது படம் டிராப் ஆகவில்லை என்றும் விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று ரசிகர்களுக்கு முக்கியமான செய்தியைப் பகிர்ந்து உள்ளார். அவரின் அடுத்த அறுபத்து ஒன்பதாவது படம் ஜூலை மாதம் இறுதியில் ஆரம்பிக்க உள்ளதாகவும் இந்த படத்தில் பணியாற்ற உள்ள டெக்னிசியன்கள் மற்றும் கலைஞர்களை உறுதி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். படம் பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாக உள்ளதாகவும் படத்தில் விஜய்யின் அரசியல் பயணத்தை நோக்கியும் கதை இருக்கும் என்று பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

விஜய் 70 படத்திற்கு ஒப்பந்தம்

கண்ணா.. லட்டு தின்ன ஆசையா என்று விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் இந்த செய்தியோடு நிறுத்தவில்லை. இன்னொரு லட்டு தின்ன ஆசையா என்று கேட்பது போல அறுபத்து ஒன்பதாவது படமே இழுபறியில் இருக்கும் இந்த நிலையில் விஜய் அவர்களின் எழுபதாவது படம் குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டது என்று ஒரு செய்தியையும் கூடுதல் ஆக சொல்லி ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார். அவர் விஜய்யின் இலக்கு 2026 தமிழக தேர்தல் நோக்கி தான் என்பதை தெளிவாக தெரிவித்து விட்டார். சமீபத்திய பாராளுமன்ற தேர்தலிலும் நடக்க உள்ள விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் போட்டியும் போடாமல் யாரையும் ஆதரிப்பது இல்லை என்று அறிவித்து விட்டார். பல அரசியல் பிரபலங்கள் மற்றும் முக்கிய தலைவர்களுடன் ஆலோசித்த போது தேர்தல் வரை படங்களில் நடித்து வரும் போது ரசிகர்களை தொடர்ந்து டச்சில் வைத்திருக்க முடியும் என்று அழுத்தமாக சொல்ல பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ விஜய் அடுத்தடுத்து படங்களில் நடிக்க உள்ளார் என்ற செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9