Vijay Pro ptselvakumar: ஒரே நேரத்தில் விஜய் - அஜித் படங்கள்.. விஜய் பிஆரோ- விற்கு வந்த சிக்கல்.. நின்று ஜெயித்த அஜித்!
விஜயின் முன்னாள் பி.ஆர்.ஓ-வாக இருந்த செல்வகுமார் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் கொடுத்த பேட்டியில், விஜய் நம்பிக்கை இழந்த தருணம் குறித்து பேசி இருக்கிறார்.
இது குறித்து செல்வகுமார் பேசும் போது, “ நான் விஜயின் ஆள் என்ற முத்திரை சினிமா துறையில் இருக்கிறது. அப்போதும் இருந்தது. விஜய் என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவரது வெற்றி, தோல்வி உள்ளிட்டவற்றில் நான் உடன் இருந்திருக்கிறேன்.
ட்ரெண்டிங் செய்திகள்
அவரது ரசிகர் மன்ற சார்பில் விழா நடத்தப்பட்டாலும் அதற்கு முழு பொறுப்பு என்னிடமே கொடுக்கப்படும். இப்படி விஜயுடன் பயணித்துக் கொண்டிருந்த காலத்தில், அஜித்தின் ஆழ்வார் படத்தில் நான் பி.ஆர். ஓவாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டார்கள். உண்மையில், ஆழ்வார் படத்தின் தயாரிப்பாளர் மோகன நடராஜனுக்கு நான் நீண்ட காலமாக பிஆர்ஓவாக பணியாற்றி கொண்டிருந்தேன். அதனால்தான் அவர் இதனை கேட்டார்.
நான் அவரிடம், நான் விஜய் நாளாக இருக்கும் பொழுது, எப்படி அஜித்தின் படத்திற்கு பிஆர்ஓவாக பணியாற்ற முடியும் என்று கேட்டேன். ஒரு நாள் ஆழ்வார் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் அழைத்தார்கள். அப்போது என்னையும் அழைத்தார்கள். திடீரென்று நான் தான் பி ஆர் ஓ என்று சொல்லிவிட்டார்கள். அங்கு இருந்த எனக்கு ஒரே வெட்கமாக ஆகிவிட்டது.
ஆகையால், அஜித் என்னை பார்த்து விடக்கூடாது என்பதற்காகவே நான் தலையை குனிந்து, அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.ஆனால், அஜித் கரெக்ட்டாக தூக்கிவிட்டார். என்னைப் பற்றி கேள்விப்பட்ட பின்னரும், அஜித் என்னையே அந்த படத்திற்கு பிஆர்ஓவாக பணியாற்ற வேண்டும் என்று சொன்னார். அங்கு தான் அஜித்தின் பெருந்தன்மை இருக்கிறது.
இந்த சமயத்தில் நான் விஜய் சாருக்கு போக்கிரி படத்திற்காகவும் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் அஜித்திடம் சிலர் தவறான தகவல்களை சொல்லி குழப்பத்தை உருவாக்க முயற்சித்தார்கள். ஆனால் நடக்கவில்லை.
ஆனால் விஜயிடம் சிலர் தவறான தகவல்களை சொன்னதில், அவர் குழம்பி விட்டார். விஜயும், மனிதன் தானே. அவருக்கும் சில சலசலப்புகள் வரும் தானே.
நானும் அவரும் அந்தக் குழப்பத்தில் இருந்த பொழுது, இடையில் என்னுடைய பொறுப்பிற்கு ஒருவர் நுழைய முயற்சித்தார். அதன் பின்னர், விஜயிடம் பலர் என்னைப் பற்றி எடுத்துச் சொல்லி, விஜயை சமாதானம் செய்தார்கள்” என்று பேசினார்.
டாபிக்ஸ்