Tamil News  /  Entertainment  /  Vijay Politics Statement Before 16 Years Goes Viral

Vijay Politics : அரசியல் வரும் எண்ணம் உண்டா.. ? 16 ஆண்டு முன்பு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Feb 12, 2024 05:30 AM IST

பல ஆண்டுகளுக்கு முன்பு தளபதி விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அளித்த பதில் அளித்து இருப்பது தற்போது, வைரலாகி வருகிறது.

விஜய்
விஜய்

ட்ரெண்டிங் செய்திகள்

விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. தமிழ் திரையுலகின் தற்போதைய டாப் ஒன் இடத்தையும், சுமார் 200 கோடி ரூபாய் சம்பளத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தார் விஜய். தான் எடுத்த படங்களை முடித்த பிறகு தான் தீவிர அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் தெளிவாக கூறியிருந்தார்.

இதற்கிடையில், பல ஆண்டுகளுக்கு முன்பு தளபதி விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அளித்த பதில் அளித்து இருப்பது தற்போது, வைரலாகி வருகிறது.

பதினாறு வருடங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்தக் கேள்வி வந்தது. குருவி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக விஜய் டிவிக்கு அளித்த பேட்டி அது. காபி வித் அனு என்ற நிகழ்ச்சியில் விஜய்யுடன் நடிகை த்ரிஷா கலந்து கொண்டார்.

அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்வி எழுந்தது. இரண்டு நிமிடம் ஒன்றும் பேசாமல் நின்றிருந்தர் விஜய். பிறகு, 'யாருக்குத் தெரியும்' என்று மிகவும் சாதாரணமாகப் பதிலளித்தார். வருவீர்களா? மாட்டீர்களா?  என்று தெரிந்தால் அனு மீண்டும் மீண்டும் கேட்டார்.

அப்போதும் தெரியவில்லை என்று சிரித்துக் கொண்டே கூறினார் விஜய். ஆனால் விஜய் நீண்ட நாட்களாக அரசியலில் ஆர்வம் காட்டி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிப்பவரி 2 ஆம் விஜய் மக்கள் கழகத்தை, தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியாக அறிவித்தார் நடிகர் விஜய். இதன் பின்னர் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் விஜய்யின் அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட போவதில்லை எனவும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை எனவும் விஜய் தெரிவித்திருந்தார். அத்துடன், வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட போவதாக அறிவித்தார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின் முதல் நிர்வாகிகள் கூட்டம் சென்னை, பனையூரில் நடைபெற்றது. ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி சினிமா படப்பிடிப்பில் இருந்ததால், அந்த கூட்டத்தில் விஜய் நேரடியாக கலந்து கொள்ளாமல், காணொளி காட்சி மூலமாக கலந்து கொண்டார்.

அப்போது விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் கிராமங்களில் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தமிழக வெற்றி கழகத்துக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம் . லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.