Vijay Mallya son: “யெஸ் சொன்னதற்கு நன்றி கண்ணு” - விஜய் மல்லையாவின் மகனுக்கு டும் டும் டும்.. - பொண்ணு யாரு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Mallya Son: “யெஸ் சொன்னதற்கு நன்றி கண்ணு” - விஜய் மல்லையாவின் மகனுக்கு டும் டும் டும்.. - பொண்ணு யாரு தெரியுமா?

Vijay Mallya son: “யெஸ் சொன்னதற்கு நன்றி கண்ணு” - விஜய் மல்லையாவின் மகனுக்கு டும் டும் டும்.. - பொண்ணு யாரு தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 18, 2024 05:59 PM IST

Vijay Mallya son: திருமண வாரம் துவங்கி விட்டது” என்று பதிவிட்டு இருக்கிறார். அதில், வண்ண வண்ண ரோஜா பூக்கள் திருமண ஃப்ரேமாக இருக்க, பின்னால் விஜய் மல்லையாவும், ஜாஸ்மினும் இருக்கின்றனர். - பொண்ணு யாரு தெரியுமா?

Vijay Mallya son: “யெஸ் சொன்னதற்கு நன்றி கண்ணு” -  விஜய் மல்லையாவின் மகனுக்கு டும் டும் டும்.. - பொண்ணு யாரு தெரியுமா?
Vijay Mallya son: “யெஸ் சொன்னதற்கு நன்றி கண்ணு” - விஜய் மல்லையாவின் மகனுக்கு டும் டும் டும்.. - பொண்ணு யாரு தெரியுமா?

“நீ என்னுடன் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டு விட்டாய் என்று நினைக்கிறேன்.

முன்னதாக , சித்தார்த் மல்லையா கடந்த ஆண்டு ஜாஸ்மினிடம் தன்னுடைய காதலை சொன்னார். அது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த அவர்அதில், “நீ என்னுடன் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டு விட்டாய் என்று நினைக்கிறேன். நான் உன்னை காதலிக்கிறேன். எனக்கு யெஸ் சொன்னதற்காக உனக்கு நன்றி” என்று அவர் அதில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவிற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து இருந்தனர். 

யார் இந்த சித்தார்த் மல்லையா? 

நடிகர், மாடல், எழுத்தாளர் என பல்வேறு முகங்கள் கொண்டிருக்கும் சித்தார்த் மல்லையா மனநலம் சார்ந்த இரண்டு நூல்களை எழுதியிருக்கிறார். அதே போல, மனநலத்தை பாதுகாப்பது குறித்தான விழிப்புணர்வையும் இளவயதினர் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார்.

If I'm Honest: A Memoir of My Mental Health Journey என்ற தன்னுடைய முதல் புத்தகத்தில் தான் எதிர்கொண்ட மனநல பிரச்சினைகளையும், அதை தான் எதிர்கொண்ட விதத்தையும் பற்றி எழுதி இருக்கிறார். மற்றொரு புத்தகமான “Sad-Glad" -ல் குழந்தைகளுக்கான விஷயங்களை பற்றி எழுதி இருக்கிறார். 

ஐபிஎல் போட்டியில், பெங்களூர் அணியின் இயக்குநர் மற்றும் “The Hunt for The Kingfisher Calendar Girl 2013" காலண்டரின் நடுவர் ஆகிய பொறுப்புகளை வகித்ததின் வாயிலாக சித்தார்த் அடையாளம் காணப்பட்டார்.

முன்னதாக, சித்தார்த் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த ரிலேஷன்ஷிப் முறிந்து விட்டதாகவும் தகவல் வெளியானது.

பல்வேறு திரைப்படங்கள், டெலிவிஷன் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் நடித்திருக்கிறார். 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்த மல்லையா லண்டன் மற்றும் ஐக்கிய அரபு நாட்டிலும் வளர்ந்தார். வெலிங்டன் கல்லூரி, குயின் மேரி யூனிவர்சிட்டி ஆஃப் லண்டன், ராயல் சென்ட்ரல் ஸ்கூல் ஆஃப் ட்ராமா உள்ளிட்டவற்றில் படித்த மல்லையா பட்டப்படிப்பு முடித்த பின்னர், மாடல் மற்றும் நடிகராக வலம் வந்தார். 

பல்வேறு திரைப்படங்கள், டெலிவிஷன் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் நடித்த அவர், ஆன்லைன் வீடியோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இது தவிர்த்து கின்னஸின் மார்க்கெட்டிங் மேனேஜராகவும் பணியாற்றி இருக்கிறார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.