Thalapathy Vijay: சட்டரீதியான நடவடிக்கை வேண்டும்! விஜய் மீது காலிணி வீசப்பட்ட விவகாரத்தில் போலீசில் புகார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy Vijay: சட்டரீதியான நடவடிக்கை வேண்டும்! விஜய் மீது காலிணி வீசப்பட்ட விவகாரத்தில் போலீசில் புகார்

Thalapathy Vijay: சட்டரீதியான நடவடிக்கை வேண்டும்! விஜய் மீது காலிணி வீசப்பட்ட விவகாரத்தில் போலீசில் புகார்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 04, 2024 04:47 PM IST

மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தபோது வந்த நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் மீது காலிணி வீசப்பட்ட விவகாரத்தில் போலீசில் புகார்
விஜய் மீது காலிணி வீசப்பட்ட விவகாரத்தில் போலீசில் புகார்

இதைத்தொடர்ந்து விஜயகாந்து உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் சென்றார். அஞ்சலி செலுத்திய பின் அவர் கிளம்பும்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விஜய் மீது காலணியை வீசியுள்ளார். இதுதொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.

நடிகர் விஜய் மீது காலனி வீசிய நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தென் சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், "விஜயகாந்த் இறப்புக்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்துக்கு டிசம்பர் 28 அன்று சுமார் இரவு 10.30 மணிக்கு தளபதி விஜய் வருகை புரிந்திருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலிணியை கழற்றி தளபதியை நோக்கி எரிந்துள்ளார்.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தளபதி விஜய் ரசிகர்கள், அவர் மீது பாசத்தை வைத்துள்ள மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட நபர் கண்டுபிடித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகார்
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகார்

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

படத்தில் முன்னாள் ஹீரோயின்களான சிநேகா, லைலா, பிரசாந்த், மோகன், மீனாட்சி செளத்ரி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் படம் உருவாகி வருகிறது.

கோட் படத்தில் விஜய் ஹைஜேக்கராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜய்யின் ஒரு கதாபாத்திரத்தை இளமை தோற்றத்தில் காண்பிக்க உள்ளார்களாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.