தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vijay Fitness Secret At The Age Of His 50

Vijay Fitness: உங்களுக்கு வயசே ஆகாதா.. 50 வயதை நெருங்கியும் விஜய் ஃபிட்னஸை எப்படி மெயிண்டெயின் செய்கிறார் என தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Feb 08, 2024 01:16 PM IST

நடிகர் விஜய் இளமையாகவும், ஃபிட்டாகவும் எப்படித் தன்னைப் பராமரிக்கிறார் என்று யோசித்திருக்கிறீர்களா..? இதோ பதில்..

விஜய்
விஜய்

ட்ரெண்டிங் செய்திகள்

இவ்வளவு இளமையாகவும், ஃபிட்டாகவும் எப்படித் தன்னைப் பராமரிக்கிறார் என்று யோசித்திருக்கிறீர்களா..? இதோ பதில்..

தளபதி விஜய்யின் டயட் திட்டம் மிகவும் எளிமையானது. அவர் காலை 5:30 மணிக்கு எழுந்திருப்பார். எழுந்தவுடன் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றாலும் வொர்க் அவுட் செய்ய தவறியதில்லை.

நடிகர் விஜய் 9: 00 மணிக்கு காலை உணவும், 1: 00 மணிக்கு மதிய உணவும், இரவு 7: 00 மணிக்கு இரவு உணவும் சாப்பிடுகிறார். முக்கியமாக 9 மணிக்குள் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்தி வைத்து இருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இதை பின்பற்றுகிறார்.

படப்பிடிப்பின் போது அசைவம் சாப்பிடுவதில்லை தளபதி விஜய். வெளியூர் செல்லும் போது தான் ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுவார். மற்ற நேரங்களில் வீட்டில் சமைத்த உணவையே சாப்பிடுவார் .

நடிகர் விஜய்க்கு ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை. தினமும் தவறாமல் நடப்பார். அதேபோல டீ, காபி குடிக்கும் பழக்கம் அவருக்கு இல்லை. இது தான் தளபதி விஜய் உடல்தகுதியுடன் இருப்பதற்கு காரணம்.

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில் ஏராளமானோரின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழக வெற்றி கழகம் என்ற பெயரிட்டு அவரது கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி சின்னம் அறிவிக்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார்.

அதே சமயம் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் அந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 25. 01. 2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் GOAT என்ற படத்தில் நடத்து வருகிறார். அதன் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இயக்குநர் ஹெச்.வினோத்துடன் இணைந்து தனது அரசியல் சார்ந்த கதை அம்சம் உள்ள படத்தை தனது கடைசி திரைப்படமாக நடிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இறுதியாக துணிவு திரைப்படத்தை இயக்கிய ஹெச்.வினோத், நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து அரசியல் சார்புள்ள கதையை திரைப்படமாக இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. அந்த படம் கைவிடப்பட்ட நிலையில் தற்போது நடிகர் விஜய் உடன் ஹெச்.வினோத் கைக்கோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.