தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay First Salary: ரூ.200 கோடி வாங்கும் விஜய்.. முதலில் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா?

Vijay First Salary: ரூ.200 கோடி வாங்கும் விஜய்.. முதலில் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா?

Aarthi Balaji HT Tamil
Jun 22, 2024 09:59 AM IST

Vijay First Salary: நடிகர் விஜய் தனது தந்தை இயக்கத்தில் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானாலும் , அதற்கு முன் எஸ்ஏசியின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார்.

ரூ.200 கோடி வாங்கும் விஜய்.. முதலில் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா?
ரூ.200 கோடி வாங்கும் விஜய்.. முதலில் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா?

Vijay Salary: நடிகர் விஜய்யின் முதல் சம்பளம் தொடர்பாக தந்தையும், இயக்குநருமான எஸ். ஏ. சந்திரசேகர் முன்பு ஒரு முறை தெரிவித்து உள்ளார் . 

ஆரம்பத்தில் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த விஜய், ரமணா இயக்கிய திருமலை படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் . 

எஸ். ஏ. சந்திரசேகர் சொன்ன ரகசியம்

நாளுக்கு நாள் அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் , எஸ்ஏசி என்ற இந்த யூ- டியூப் சேனல் மூலம் தன்னைப் பற்றியும், தனது மகன் விஜய்யைப் பற்றியும் பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து வருகிறார். 

அந்த வகையில் நடிகர் விஜய்யின், தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் தற்போது தனது மகன் விஜய் சினிமாவில் முதலில் நடித்ததற்காக வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என்ற தகவலை பேசி இருக்கிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

விஜய் முதல் சம்பளம்

நடிகர் விஜய் தனது தந்தை இயக்கத்தில் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானாலும் , 1980 ஆம் ஆண்டு குழந்தை நடிகராக முன் எஸ்ஏசியின் படங்களில் திரையுலகில் நுழைந்தார். 1984 ஆம் ஆண்டு அவரது தந்தை இயக்கிய வெற்றி படத்தின் மூலம் அவரது சினிமா அறிமுகமானார். 

அப்போது நடிகர் விஜய்க்கு முதலில் ரூ. 500 சம்பளம் கொடுக்கப்பட்டதாக இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் தெரிவித்து இருக்கிறார். 

100 கோடி ரூபாய் சம்பளம்

இவ்வாறு சொற்ப சம்பளம் வாங்கிய விஜய், படிப்படியாக உயர்ந்து தற்போது 100 கோடி ரூபாய் மேல் முதல் 150 கோடி ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது விஜய்யின் உழைப்பு மற்றும் அவரது நடிப்பு திறமையை மட்டுமே சார்ந்து உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பல அரசியல்வாதிகளால் நிறுத்தப்பட்டாலும் கடுமையாக உழைத்தவர்.

லியோ பட சம்பளம்

கடந்த ஆண்டு மே மாதம் லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் விஜய் நடித்ததற்காக 200 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

விஜய்யின் கடின உழைப்பு

தற்போது ஒரு படத்துக்கு ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் விஜய், 20 வருடங்களுக்கு முன்பு ரூ. 4 கோடி வாங்கிய தகவலை பலரும் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர் . இதை கேட்ட பலரும் வளர்ந்தால் விஜய் போல் வளர வேண்டும், அதற்கு அவரின் கடின உழைப்பே காரணம் என அவரை பாராட்டி வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.