Thalapathy Vijay: 'விஜய்ய ஹீரோவ புரொமோட் பண்ணேன்.. முதல் 10 படம் பாத்தா தெரியும்'- எஸ்.ஏ. சந்திரசேகர் அதிரடி
Thalapathy Vijay: நடிகர் விஜய்ய இந்த மாதிரி தான் ஹீரோவா புரொமோட் பண்ணேன் என விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அதிரடியாக பேசியுள்ளார்.

Thalapathy Vijay: நடிகர் விஜய், நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, மெல்ல மெல்ல குடும்ப ரசிகர்களை கவர்ந்து பின், ஆக்ஷன் ஹீரோவாக மாறி, தற்போது தளபதியாக மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.
இந்த சமயத்தில் அவர், தற்போது அரசியலிலும் களம் கண்டு வருகிறார். அதனால், தன் திரைப் பயணத்தை ஜனநாயகன் படத்துடன் நிறுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில், கூரன் பட விழாவில் பங்கேற்று பேசிய இயக்குநரும் நடிகரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய்யை எப்படி மக்கள் மனதில் ஹீரோவாக பதிய வத்தேன். அதற்காக எப்படி எல்லாம் புரொமோட் செய்தேன் என பேசி அதிரடி காட்டியுள்ளார்.
ஹீரோக்கு வேல்யூ
அவர் பட விழாவில் பேசிய போது, " நான் விஜயகாந்தோட நிறைய படம் பண்ணிருக்கேன். ஆரம்பத்துல இருந்து பாத்தா சட்டம் ஒரு இருட்டறை படம் பண்ணுனோம். அந்த படத்தப்போ நான் புது முகம். விஜயகாந்த் சாரும் ஏறக்குறைய புதுமுகம் தான். ஒருபடம் தான் பண்ணிருக்காரு. அப்போ, படத்துக்கான டெக்னீசியன்ஸ் எல்லாம் பெருசா தான் எல்லாரும் போடுவாங்க.
ஒரு பெரிய கேமரா மேன், ஒரு பெரிய மியூசிக் டைரக்டர், இதெல்லாம் போட்டு படம் எடுக்கலாம். ஆனா படத்தோட அவுட்புட் வந்து படம் வெற்றி அடையும் போது ஹீரோவால படம் ஓடுச்சான்னு கேப்பாங்க. அந்த ஒளிப்பதிவாளரால தான் படம் ஓடுச்சு. மியூசிக் டைரக்டரால தான் படம் ஓடுச்சுன்னு சொல்லுவாங்க. அப்படி சொன்னாவே நான் அந்த ஹீரோவுக்கு வேல்யூ இல்லன்னு நெனக்குறேன்.
வெற்றி ஹீரோ தலையில்
அதுனால நான் விஜயகாந்த் படம் பண்ணும் போது, புது கேமரா மேன், புது எடிட்டர், நான் புது டைரக்டரா இருந்தேன். அப்போ தான் அந்த வெற்றி முழுக்க முழுக்க ஹீரோ தலையில போய் உக்காரும். அப்போ தான் அந்த ஹீரோ தலைவனாக முடியும். அந்த ஹீரோவ மோல்டு பண்ணா தான் அடுத்த படம் பெரிய டைரக்டரோட பண்ணனும்ங்குற எதிர்பார்ப்பும் வரும். இதுக்கு பல உதாரணம் இருக்கு. அவங்களோட பெயரை நான் சொல்ல விரும்பல.
விஜய்யின் ஹீரோ புரொமோஷன்
அதே மாதிரி தான் நான் என் மகனையும் புரொமோட் பண்ணுனேன். விஜய்ய சினிமாவுக்கு அறிமுகப்படுத்தும்போது நான் பீக்ல இருக்கேன். இந்தி படம் அது இதுன்னு பண்ணிட்டு வருமானம் அப்படி வந்துட்டு இருந்தது. நான் அவரோட முதல் படம் நாளைய தீர்ப்புக்கு பெரிய கேமராமேன், மியூசிக் டைரக்டர் போட்ருக்கலாம். ஆனா அப்படி செய்யல. புது கேமராமேன், புது மியூசிக் டைரக்டர். அப்போ தான் விஜய் மேல மொத்த வெற்றியும் போய் சேரும். அதுனால நீங்க விஜய்யோட முதல் 10 படங்கள பாத்தீங்கன்னா பெரிய டெக்னீஷியன்சே இருக்க மாட்டாங்க. இதுதான் ஹீரோவ புரொமோட் பண்றது.
இப்படி தான் விஜய்ய உருவாக்குனேன்
அந்த ஹீரோவால படம் ஓடுச்சு, அந்த ஹீரோவால படம் ஓடுச்சுன்னு சொல்லும் போது தான் அந்த ஹீரோவுக்கே வேல்யூ. இப்படி உருவாக்குனவரு தான் விஜய். ஒரு ஹீரோவ உருவாக்குறது சாதாரண விஷயம் இல்ல. இதை எல்லாம் எதுக்கு சொல்ல வந்தேன்னா, இந்த கதை எங்களை உருவாக்கி இருக்கிறதுன்னு சொல்றதுக்காக" எனக் கூறினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்