Vijay and Udayanidhi: வைரல் ஆகும் உதயநிதியின் பதிவு - வைச்சு செய்யும் விஜய் ரசிகர்கள்
நடிகர் உதயநிதி ஸ்டாலினின் பழைய பதிவினை விஜய் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பழைய பதிவை, ரீட்வீட் செய்து விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் கட்சியினர் கிண்டல் அடித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் தமிழ் சினிமா மட்டுமல்லாது, தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகராக இருக்கிறார். ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ. 100 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். இந்நிலையில் பத்து ஆண்டுகளுக்கு முன், கடந்த விஜய் ரசிகர்கள் சங்கம், விஜய் மக்கள் இயக்கமாகப் பரிணமித்தது. மேலும், 2020ஆம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சார்ந்த உறுப்பினர்கள், விஜய் மக்கள் இயக்கம் என்னும் பெயரைப் பயன்படுத்தி சுயேச்சையாக, தேர்தலில் களம் கண்டுவென்றார்கள்.
மேலும் சமீப காலமாக விஜய்யின் அறிவுறுத்தலின்படி, அவரது அரசியல் பிரவேசத்திற்காக, விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இலவச உணவு விநியோகம், கண் தானம், இரவு நேர ஆய்வு மையங்கள் அமைத்தல் உள்ளிட்டப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். அண்மையில் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில், ஊரக அளவில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார். மேலும் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ராமசாமி மற்றும் காமராஜ் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பற்றி படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார். கன மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு அவர் சமீபத்தில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியைப் பதிவு செய்து, அரசியல் களத்தில் குதித்து இருக்கிறார். இதனால் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் அப்படியே, தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்களாக மாறி வருகின்றனர். இதனால் அரசியல் களம்சூடுபிடித்துள்ளது. மேலும், நடிகர் விஜய் திமுகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் டஃப் கொடுப்பார் என்பது தெரிகிறது. அவரது அரசியல் வருகை குறித்த அறிக்கையிலும் மத அரசியலுக்கு எதிராகவும், ஊழல் அற்ற என்னும் வார்த்தைகளையும் தேர்வுசெய்து பயன்படுத்தியுள்ளார். இதனால் தனது கட்சிக்கு வலுவான கொள்கைகளை விஜய் வைத்திருப்பார் எனத் தெரிகிறது. மேலும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரசியல் கட்சியினரும் திரைத்துறையினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அப்போது, திமுக இளைஞரணிச் செயலாளரும் நடிகரும் அமைச்சருமான உதய நிதி ஸ்டாலின், ‘இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம். மக்கள் பணி செய்ய வரும் நடிகர் விஜய்க்கு எனது வாழ்த்துகள்’ எனத் தெரிவித்தார்.
மேலும் விஜய் மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக் கழகமாக மாறத்தொடங்கியதில் இருந்து, விஜய் ரசிகர்கள், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களாக மாறியுள்ளனர். இது கட்சிகளுக்கு இடையே பிரச்னையாகவும் உருவெடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, திமுகவை - தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் இணையத்தில் கலாய்த்தும் வறுத்தெடுத்தும் வருகின்றனர்.
குறிப்பாக, 2011ஆம் ஆண்டு, உதயநிதி ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின்போது செய்த டிவீட் ஒன்று வைரல் ஆகிவருகிறது. அதில் பதிவர் ஒருவர், ‘’நண்பன் கூட ஓ.கே. ஓ.கே. ரிலீஸ் பண்ணுங்க ப்ரோ. செமயா இருக்கும். தமிழ்நாடு முழுக்க கண்டிப்பாக ஒரு பேச்சாகத் தான் இருக்கும். என்ன பாஸ் ஓ.கே.வா’’எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் அந்தப் பதிவிற்குப் பதிலளித்த உதயநிதி, ‘’ காமெடி பண்ணாதீங்க ப்ரோ. விஜய் அண்ணா கூட போய் போட்டி போட நான் லூஸா?’ எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரல் ஆகி வருகிறது.
இப்படி ஒரு கட்டத்தில் திமுக ஆதரவாளர்களும் தொடர்ந்து விஜய்யை ட்ரோல் செய்ய, அவரது ரசிகர்கள் கொதித்து எழுந்து, திமுகவை கலாய்த்து வருகின்றனர்.
இதனால் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும் இடையே இணையம் எங்கும் மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்