Vidaamuyarchi: தவெக கொடியுடன் வந்த ரசிகர்.. விழுந்த மரண அடி.. “TVK ஒழிக” கோஷம் - பிரபல திரையரங்கில் சம்பவம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidaamuyarchi: தவெக கொடியுடன் வந்த ரசிகர்.. விழுந்த மரண அடி.. “Tvk ஒழிக” கோஷம் - பிரபல திரையரங்கில் சம்பவம்

Vidaamuyarchi: தவெக கொடியுடன் வந்த ரசிகர்.. விழுந்த மரண அடி.. “TVK ஒழிக” கோஷம் - பிரபல திரையரங்கில் சம்பவம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Feb 07, 2025 11:59 AM IST

Vidaamuyarchi: விடாமுயற்சி பார்க்க தவெக கொடியுடன் வந்த ரசிகர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. “TVK ஒழிக” எனவும் அஜித் ரசிகர்கள் கோஷம் எழுப்பிய சம்பவம் திருநெல்வேலியில் நடந்துள்ளது.

தவெக கொடியுடன் வந்த ரசிகர்.. விழுந்த மரண அடி.. “TVK ஒழிக” கோஷம் - பிரபல திரையரங்கில் சம்பவம்
தவெக கொடியுடன் வந்த ரசிகர்.. விழுந்த மரண அடி.. “TVK ஒழிக” கோஷம் - பிரபல திரையரங்கில் சம்பவம்

பல்வேறு பகுதிகளில் விடாமுயற்சி ரிலீஸ் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்களுடன், விஜய் ரசிகர்களும் இணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் திருநெல்வேலி புகழ் பெற்ற ராம் சினிமாஸில் விடாமுயற்சி கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக கொடியுடன் வந்ததால் பிரச்னை

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊர்களிலும் ஐகானிக் திரையரங்குகள் இருந்து வருகின்றன. இந்த திரையரங்குகளில் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ரசிகர்களால் மிக பெரிய அளவில், பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி திருநெல்வேலி ராம் சினிமாஸில் காலை 9 மணிக்கு தொடங்கிய விடாமுயற்சி சிறப்பு காட்சி முதல் இரவு காட்சி வரை ரசிகர்கள் மிகுந்த ஆராவாரத்தில் ஈடுபட்டனர். அப்போது படத்தின் காட்சி தொடங்குவதற்கு முன் ரசிகர்கள் திரையரங்கு உள்ளே செல்ல வரிசையாக நின்று கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் விஜய் ரசிகர்கள் சிலர் தவெக காட்சி கொடியை பிடித்தபடி கூட்டத்தின் முன்னே நின்றுள்ளனர். அப்போது சிலரால் விஜய் ரசிகர்கள் கடுமாக தாக்கப்பட்டனர். அத்துடன் விஜய் ரசிகர்களின் நடத்தைக்கும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது பாதுகாப்புக்கு இருந்த போலீசார் உள்ளே புகுந்து சமாதானம் செய்தனர்.

விஜய் கட்சிக்கு எதிராக கோஷம்

இந்த சம்பவத்தின் போது அஜித் ரசிகர்கள் சிலர் TVK ஒழிக, TVK ஒழிக எனவும் கோஷமிட்டனர். அத்துடன் வழக்கமாக கடவுளே அஜித் என்ற கோஷத்தையும் வெளிப்படுத்தினர். இதன் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் விஜய் ரசிகர்களின் இந்த செயலை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே விஜய் ரசிகர்களும் பதிலடி தரும் விதமாக, விடாமுயற்சி ரிலீஸ் கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர்கள் செய்த அலம்பல்களை பகிர்ந்தும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

விடாமுயற்சி படம்

ஹாலிவுட் பட ஸ்டைலில் பக்கா ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித்குமார் - த்ரிஷா ஆகியோர் ஐந்தாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். அர்ஜுன், ரெஜினா, ஆரவ், ரம்யா சுப்பிரமணியன், ரவி ராகவேந்திரன் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் ரூ. 250 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. அஜர்பைஜான் நாட்டில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் கடைசியாக கடந்த 2023இல் துணிவு படம் வெளியானது. இதன் பின்னர் இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின் அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் படமாக விடாமுயற்சி உள்ளது.

விடாமுயற்சி கதை

அர்ஜுன் ( அஜித்) பிரபல நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் கயலுக்கும் ( த்ரிஷா) இடையே நடந்த சந்திப்பு இருவரையும் காதல் கொள்ள வைக்க ஒரு கட்டத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். நன்றாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் காயலுக்கு இன்னொருவர் மீது ஈர்ப்பு ஏற்பட அவள் விவாகரத்து முடிவை எடுக்கிறார்.

அர்ஜுன் எவ்வளவோ முயற்சித்தும் தன்னுடைய தனது முடிவில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார் கயல். இதன் நிலையில் இருவரும் கடைசியாக ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்த பயணத்தில் திரிஷா மிஸ் ஆகிறார். மிஸ் ஆன த்ரிஷாவை அஜித் எப்படி கண்டு பிடித்தார்? அதன் பின்னணியில் நடப்பது என்ன என்பதுதான் படத்தின் கதை.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.