'அந்த அளவு காதல்.. நான் அரசனானால் அனிருத்தை கடத்தி விடுவேன்..' சம்பவம் செய்த விஜய் தேவரகொண்டா..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'அந்த அளவு காதல்.. நான் அரசனானால் அனிருத்தை கடத்தி விடுவேன்..' சம்பவம் செய்த விஜய் தேவரகொண்டா..

'அந்த அளவு காதல்.. நான் அரசனானால் அனிருத்தை கடத்தி விடுவேன்..' சம்பவம் செய்த விஜய் தேவரகொண்டா..

Malavica Natarajan HT Tamil
Published May 15, 2025 04:38 PM IST

நான் மட்டும் அரசனாக இருந்தால் இசையமைப்பாளர் அனிருத்தை கடத்தி கொண்டு போய் வைத்து, என் படங்களுக்கு மட்டும் இசையமைக்குமாறு கூறுவேன் என நடிகர் விஜய் தேவரகொண்டா விளையாட்டாக பேசியுள்ளார்.

'அந்த அளவு காதல்.. நான் அரசனானால் அனிருத்தை கடத்தி விடுவேன்..' சம்பவம் செய்த விஜய் தேவரகொண்டா..
'அந்த அளவு காதல்.. நான் அரசனானால் அனிருத்தை கடத்தி விடுவேன்..' சம்பவம் செய்த விஜய் தேவரகொண்டா..

அனிருத் மீது காதல்

அனிருத் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து விஜய் கேட்கப்பட்ட போது, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பே அனிருத்தின் இசையை விரும்பி வந்ததாகக் கூறினார். அவர் கூறுகையில், “வி.ஐ.பி மற்றும் 3 படங்களைப் பார்த்ததும் அனிருத் மீது எனக்கு காதல் வந்துவிட்டது. இந்த மனிதர் யார்? இவர் சாதாரணமானவர் இல்லை.

அது சாத்தியம் ஆகவில்லை

எனக்கு அவர் மேல் இருக்கும் அன்பு வேறு மாதிரி. அப்போது நான் நடிகராக இல்லை. ஆனால், நான் ஒரு நடிகனாக ஆனால், இதுதான் எனக்கு வேண்டிய இசை என்று நினைத்தேன். சில நேரங்களில் நடிக்கும் போது, அவரது இசைக்கு நடிப்பது போல உணர்வேன். இப்போது அது நிறைவேறியிருப்பது மிகவும் வித்தியாசமானது. பல படங்களில் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன், ஆனால் அது சாத்தியமாகவில்லை.”

அனிருத்தை கடத்துவேன்

அவர் ஒரு மன்னராக இருந்தால், தனக்குப் பிடித்த அனிருத் மற்றும் பிற கலைஞர்களை 'கடத்தி' தனது படங்களுக்கு மட்டும் இசை அமைக்க வைப்பேன் என்றும் கூறினார். அத்துடன் அவர் மீது தான் வைத்திருக்கும் காதல் அசாதாரணமானது என்றும் கூறினார்.

எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தாலும் அவரது இசை தான்

“ஒரு முறை, எனக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதற்கு சுமார் 40 நிமிடங்கள் ஆகும். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் அந்த இயந்திரத்தில் நீங்கள் தனியாக தான் இருப்பீர்கள் என்றதும் நான் அங்கு பாட்டு கேட்கலாமா என்று கேட்டேன், அதற்கு அவர்கள் சம்மதித்தனர். அந்த சமயத்தில் அனிருத் ரவிச்சந்தரின் ஹிட் பாடல்களை வைத்து 40 நிமிடங்கள் கேட்டு ரசித்தேன்.” என்று விஜய் தேவரகொண்டா கூறினார்.

கிங்டம் படம்

கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிங்டம்' படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மே 30 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படத்தின் வெளியீடு ஜூலை 4 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நல்ல வரவேற்பு

முன்னதாக கிங்டம் படத்திலிருந்து ஹ்ரிதயம் லோபாலா' என்ற பாடல் வெளியிடப்பட்டது. இது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பேட்டியில், அந்தப் பாடலை வேறு யாராவது தங்கள் படத்தில் பெற்றிருந்தால், தனக்கு பொறாமை வந்திருக்கும் என்று விஜய் தேவரகொண்டா கூறினார்.