36 வது பிறந்தநாள்.. தாமதாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராஷ்மிகா.. விஜய் தேவரகொண்டா கொடுத்த பதில் என்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  36 வது பிறந்தநாள்.. தாமதாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராஷ்மிகா.. விஜய் தேவரகொண்டா கொடுத்த பதில் என்ன தெரியுமா?

36 வது பிறந்தநாள்.. தாமதாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராஷ்மிகா.. விஜய் தேவரகொண்டா கொடுத்த பதில் என்ன தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Published May 10, 2025 02:11 PM IST

ராஷ்மிகாவும் விஜயும் நீண்ட காலமாக காதலிப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. இருவரும் உறவில் இருப்பதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

36 வது பிறந்தநாள்.. தாமதாக பிறந்தநாள் சொன்ன  ராஷ்மிகா.. 

விஜய் தேவரகொண்டா கொடுத்த பதில் என்ன தெரியுமா?
36 வது பிறந்தநாள்.. தாமதாக பிறந்தநாள் சொன்ன ராஷ்மிகா.. விஜய் தேவரகொண்டா கொடுத்த பதில் என்ன தெரியுமா? (Instagram)

ராஷ்மிகா விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

விஜய் தேவரகொண்டா கேமராவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்த ராஷ்மிகா ‘நான் மீண்டும் தாமதப்படுத்தி விட்டேன். பிறந்தநாள் வாழ்த்துகள் விஜு

ராஷ்மிகாவின் பதிவுக்கு விஜய் கொடுத்த ரிப்ளை என்ன?

உங்கள் நாட்கள் அனைத்தும் ஆசீர்வாதங்கள் மற்றும் அன்பு, மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம், அமைதி மற்றும் பிற அனைத்தும் நிறைந்ததாக இருக்கட்டும்’ என்று பதிவிட்டு இருந்தார்.

அதை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பக்கத்தில் பகிர்ந்த விஜய், ‘அழகானது; உங்கள் அனைத்து விருப்பங்களும், ஆசீர்வாதங்களும் நிறைவேறட்டும்!" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Rashmika Mandanna also posted a cute photo of Vijay.
Rashmika Mandanna also posted a cute photo of Vijay.

ராஷ்மிகா மற்றும் விஜய் பற்றி

ராஷ்மிகாவும் விஜயும் நீண்ட காலமாக காதலிப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. இருவரும் உறவில் இருப்பதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

ஆனால், முழுவதுமாக ஒருவரையொருவர் காதலிப்பதாக வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும், அவர்கள் அடிக்கடி ஒன்றாக நேரத்தை செலவிடுவதைப் சோசியல் மீடியா வழியாக பார்க்க முடிகிறது.

கடந்த மாதம், ராஷ்மிகாவின் 29வது பிறந்தநாளில், ஓமன் கடற்கரையில் அந்த நாளை கொண்டாடிய படங்களை பகிர்ந்து இருந்தார். அந்தப்புகைப்படங்கள் விஜய் கடற்கரையில் மகிழ்ந்த புகைப்படங்களுடன் ஒத்திருப்பதை ரசிகர்கள் கவனித்தனர்.

மேலும், ராஷ்மிகா மற்றும் விஜய்யின் புகைப்படங்களின் பின்னணியில் உள்ள ஒற்றுமைகளையும் ரசிகர்கள் வட்டமிட்டு காண்பித்திருந்தனர். புஷ்பா 2 விருது விழாவில் காதலன் குறித்து ராஷ்மிகாவிடம் கேட்ட போது, அந்த விஷயம் எல்லோருக்கும் தெரியும் என்று பதில் கொடுத்திருந்தார்.

ராஷ்மிகா மற்றும் விஜய்யின் படங்கள்

ராஷ்மிகா கடைசியாக சல்மான் கானுடன் சிக்கந்தர் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக தனுஷ், நாகர்ஜுனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். அதே போல தெலுங்கு படமான தி கேர்ள்ஃபிரெண்ட் ஆயுஷ்மான் குரானாவின் தமா உள்ளிட்ட படங்களில் நடிக்க இருக்கிறார்.

விஜய்க்கு கடந்த லைகர் படம் படுதோல்வி அடைந்த நிலையில், அடுத்தாக கிங்டம் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கௌதம் தின்னனூரி இயக்கியுள்ள இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் சத்யதேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர். இப்படம் மே 30 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். அண்ணா பல்கலைகழகத்தில் பி இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்திருக்கும் இவர், மூன் டிவி, புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களை தொடர்ந்து கடந்த 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.