Vijay Deverakonda: விஜய் - மிருணாள் ரொமன்ஸ்.. நாளை வரும் விருந்து! - அப்டேட் இங்கே!
ஏப்ரல் 5 ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ள 'ஃபேமிலி ஸ்டார்' படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வாசு வர்மா பணியாற்றியுள்ளார்.
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 'ஃபேமிலி ஸ்டார்' படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில், பரசுராம் பெட்லா இயக்கத்தில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் பேனரில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஃபேமிலி ஸ்டார்'.
முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான லைகர் திரைப்படம் ஃப்ளாப் ஆன நிலையில், அதன் பின்னர் சமந்தாவுடன் அவர் இணைந்து நடித்த குஷி திரைப்படம் வெற்றியைப் பெற்றது. இதனால் விஜயின் இந்தத்திரைப்படம் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.
ஏப்ரல் 5 ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ள 'ஃபேமிலி ஸ்டார்' படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வாசு வர்மா பணியாற்றியுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கான மியூசிக் புரோமோஷனாக படத்தின் முதல் பாடலான ‘நந்தனந்தனா' சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் சமூக வலைதளங்களில் மில்லியன் பார்வைகளைக் கடந்து சென்று கொண்டு இருக்கிறது.
தொடர்ந்து இப்படம் தொடர்பான அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், இந்தப்படத்தின் டீசர் தொடர்பான அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன் படி ஃபேமிலி ஸ்டார் படத்தின் டீசர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:

டாபிக்ஸ்