தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vijay Deverakonda And Mrunal Thakur Dance At Holi Event At Promote Family Star

Vijay Deverakonda - Mrunal Thakur: விஜயதேவரகொண்டாவின் கன்னத்தில் வண்ணங்களைத்தூவிய மிருணாள் தாக்கூர் - அதுவே இருக்குமோ?!

Marimuthu M HT Tamil
Mar 25, 2024 05:42 PM IST

Vijay Deverakonda - Mrunal Thakur: ஹோலிப் பண்டிகை இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோர் வெள்ளை உடை அணிந்து ஹோலிப் பண்டிகை கொண்டாடினர்.

விஜயதேவரகொண்டாவின் கன்னத்தில் வண்ணங்களைத்தூவிய மிருணாள் தாக்கூர்
விஜயதேவரகொண்டாவின் கன்னத்தில் வண்ணங்களைத்தூவிய மிருணாள் தாக்கூர்

ட்ரெண்டிங் செய்திகள்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோர் இணைந்து படக்குழுவினருடன் ஹோலிப் பண்டிகை கொண்டாடி மேடையில் நடனமாடினர். மிருணாள் தனது இன்ஸ்டாகிராம் கதைகளில் நிகழ்வின் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். 

வெள்ளை குர்தாவில் விஜய்தேவரகொண்டா:

நாடுமுழுவதும் இன்று ஹோலிப் பண்டிகை கொண்டாடி வரும் நிலையில், விஜய்தேவரகொண்டா மற்றும் மிருணாள் இருவரும் வெள்ளை நிற உடையில் நடனமாட வந்தனர். விஜய் வெள்ளை குர்தா மற்றும் பைஜாமாவை அணிந்து இருந்தார். மிருணாள் வெள்ளை சுடிதார் மற்றும் அனார்கலி குர்தாவில் அழகாக காட்சி தந்தார். 

இருவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து ரசிகர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான ஹோலி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும் ‘’ஃபேமிலி ஸ்டார்'' படத்தில் இடம்பெற்ற ‘’கல்யாணி வச்சா வச்சா'' பாடலுக்கு ஒரு குறுகிய நடனமும் ஆடி மகிழ்ந்தனர். அவர்கள் மேடையில் நடனமாடும் வீடியோக்கள் பல ரசிகர் பக்கங்களால் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டன.

மிருணாள் விஜய் தேவரகொண்டாவின் முகத்தில் வண்ணங்களைப் பூசுவதைக் காண முடிந்தது. அவர் தனது இன்ஸ்டாகிராம் கதைகளில் ஒரு குறுகிய வீடியோவைப் பகிர்ந்து கொண்டார். அங்கு விஜய்யின் கன்னங்களில் உலர்ந்த வண்ணங்களைப் பூசுவதை மிருணாள் பூசுவதைக் காண முடிந்தது. அதில், ‘’இது நம்முடைய ஹோலி" என்று பதிவிட்டுள்ளார்.

ஃபேமிலி ஸ்டார் படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று வெளியிடப்பட்டது. இது விஜய் மற்றும் மிருணாள் ஆகியோருக்கு ஹோலி பரிசாக அமைந்தது. 

மதுரமு கதா என்று பெயரிடப்பட்ட இந்தப் பாடல் படத்தில் மிருணாள் மற்றும் விஜய்யின் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவை காட்சிப்படுத்தியுள்ளது.

தெலுங்கு மொழியில், பரசுராம் பெட்லா இயக்கியுள்ள ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு இன்று படத்தின் புரமோஷன்களைத் தொடங்கியது. 

துல்கர் சல்மானுடன் சீதா ராமம் மற்றும் நானியுடன் ஹாய் நன்னா ஆகியப் படங்களில் நடித்தபிறகு, மிருணாள் தாக்கூர் நடிக்கும் மூன்றாவது படம், ஃபேமிலி ஸ்டார் ஆகும். 

கடந்த மார்ச் 24ஆம் தேதி, தனது பட வெளியீட்டிற்கு முன்னதாக ஆசீர்வாதம் பெற ஹைதராபாத்தின் பால்காம்பேட்டையில் உள்ள ஸ்ரீ யெல்லம்மா போச்சம்மா கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

விஜய் தேவரகொண்டா கடைசியாக, தெலுங்கு மொழியில் குஷி படத்தில் நடித்து இருந்தார். விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையில் காதல் இருப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளயிருப்பதாகவும் இருந்த நிலையில் தற்போது, மிருணாள் தாக்கூருடன் விஜய் தேவரகொண்டா நெருக்கம் காட்டி வருகிறார்.

2016ஆம் ஆண்டு, பெல்லி சூப்புலு என்னும் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர், நடிகர் விஜய் தேவரகொண்டா. அதன்பின், 2017ஆம் ஆண்டு விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.  இவரது நடிப்பில், 2018ஆம் ஆண்டு, கீதா கோவிந்தம் என்னும் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இதில் ஜோடியாக நடித்தபின் தான், ராஷ்மிகாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையே காதல் என செய்திகள் பரவின. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்