Tamil News  /  Entertainment  /  Vijay Devarkonda Clarifies Marriage Rumour With Rashmika

இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை திருமணமா? - கடுப்பான விஜய் தேவரகொண்டா

Aarthi Balaji HT Tamil
Jan 20, 2024 01:30 PM IST

ராஷ்மிகாவோடு திருமணம் என பரவி வந்த வதந்திக்கு விஜய் தேவரகொண்டா முற்றுப்புள்ளி வைத்தார்.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் கன்னட படத்திற்குப் பிறகு, அவர் நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்தார், மேலும் ராஷ்மிகாவுக்கு அவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் பின்னர் ராஷ்மிகா அதில் இருந்து விலகினார். சினிமாவுக்கு வந்த பிறகு ராஷ்மிகாவுடன், விஜய் தேவரகொண்டாவின் பெயரும் அதிகம் கேட்கப்படுகிறது.

சமீபத்தில், இவர்களின் லிவ்வின் உறவில் இருப்பதாக செய்திகள் வந்தன. அதே நேரத்தில், இருவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது ரசிகர்கள் மட்டுமில்லாமல், திரையுலகினர் மத்தியிலும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவுக்கு அடுத்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும், அதன் பின்னர் இந்த ஆண்டில் அவர்களின் திருமணம் நடைபெறும் என வதந்திகள் பரவின.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.

அதில், “ நான் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவோ, அல்லது திருமணம் செய்து கொள்ளவோ இல்லை. ஊடகங்கள் தான் எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருமணம் செய்து வைக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த வதந்தியை நான் கேட்டு வருகிறேன். அவர்கள் என்னை கையோடு கை பிடித்து திருமணம் செய்து வைக்க இருக்கிறார்கள்.

பிப்ரவரி மாதம் நான் ராஷ்மிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக வரும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை “ என்றார். இதன் மூலம் இருவரும் இணைத்து வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய் தேவரகொண்டா.

அர்ஜுன் ரெட்டிக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா பான் இந்திய நட்சத்திரமாக மாறினார். ஒரு படத்தில் நடித்ததற்காக விஜய் தேவரகொண்டா சம்பளம் வாங்கவில்லை. அவரின் அம்மா சாவித்திரியை பற்றி சொன்னதால் விஜய் தேவரகொண்டா மகாநதி படத்திற்கு சம்பளம் வேண்டாம் என சொன்னார். அதேபோல் மீடியாக்களில் விஜய் தேவரகொண்டா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அப்பா சொல்லியிருக்கிறார். சிரஞ்சீவி கூட ஒருமுறை இவரின் திரையுலக வாழ்க்கையைப் பாராட்டினார். சிரஞ்சீவி தனது இளமையை பார்ப்பது போல் உணர்கிறேன் என்று முன்பு கூறியிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.