Kalki 2898 AD:கல்கி கி.பி.2898-யை ஒரே நாளில் பார்த்த விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா; அடுத்தடுத்த ட்வீட்.. ஒரு வேளை இருக்குமோ
Kalki 2898 AD: கல்கி கி.பி.2898-யை ஒரே நாளில் பார்த்த விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஆகியோர், சில நிமிஷ கேப்பில் போட்ட ட்வீட்டால் பரபரப்பு உண்டாகிறது.
Kalki 2898 AD: விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் கல்கி கி.பி.2898 படத்தை ஒரே நாளில் பார்த்ததோடு மட்டுமல்லாமல், அடுத்தடுத்து 55 நிமிட இடைவெளியில் எக்ஸ் தளத்தில் புகழ்ந்து தள்ளியது இருவருக்குமான நெருக்கத்தை கூறுவதாக அமைவதாகப் பலர் கூறுகின்றனர்.
கல்கி கி.பி 2898 படத்தில் நடித்தவர்கள்:
நாக் அஸ்வினின் இயக்கத்தில் கல்கி கி.பி. 2898 அறிவியல் புனைகதை மற்றும் புராணங்களை இணைக்கும் ஒரு டிஸ்டோபியன் திரைப்படம் ஆகமாக உருவாகி ரிலீஸாகியுள்ளது.
கல்கி கி.பி. 2898 திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடித்துள்ளனர். அதில் சில காட்சிகளுக்கு, மிருணாள் தாக்கூர், அன்னா பென், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் மற்றும் பிரம்மானந்தம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கல்கி கி.பி.2898 படத்தின் கதை:
கல்கி கி.பி 2898 திரைப்படமானது, உயிர் வடிவம் இல்லாத உலகில் இருக்கும் காம்ப்ளெக்ஸ் பகுதியின் கடைசி நகரம், காசி நகரம். காசியை கொடுங்கோலன் யாஸ்கின் (கமல்ஹாசன்) ஆளுகிறார். அவர் நகரத்தின் மீது வட்டமிடும் தலைகீழ் பிரமிடுக்குள் (இது காம்ப்ளெக்ஸ் எனப்படுகிறது) அமர்ந்திருக்கிறார். இதற்கிடையில், பைரவர் (பிரபாஸ்) போன்ற வக்கிரமான வேட்டைக்காரர்கள் பணம் சம்பாதிக்க முயற்சிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் மிகவும் சலுகை பெற்ற வாழ்க்கையை வாழக்கூடிய காம்ப்ளெக்ஸுக்குள் நுழைய முயற்சிக்கின்றனர். காம்ப்ளெக்ஸ் பகுதியில் தனக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்ற மிகப்பெரிய லட்சியம் கொண்டவராக அதில் பைரவர் இருக்கிறார்.
அதனால், காம்ப்ளெக்ஸ் பகுதி, ஒரு வலுவான மனித அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.
இப்படத்தில் அஸ்வத்தமா (அமிதாப்) மற்றும் எஸ்யூ- எம் 80 (தீபிகா படுகோனே) ஆகியோருடன் பைரவர் எவ்வாறு தனது லட்சியத்தை அடைகிறார் என கதை இருக்கிறது. முக்கிய கதை, வில்லனை விட படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்களை நம்பியிருப்பது தெரிகிறது.
கல்கி கி.பி 2898 பட ஹிந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனம்:
கல்கி 2898 Ad படத்தைப் பற்றிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனத்தின் ஒரு பகுதி, " எல்லா வகையிலும் ஒரு காட்சிக் காட்சி, கல்கி உலகத்தரம் வாய்ந்த விஎஃப்எக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது, அது ஏமாற்றமளிக்காது. பெரிய அளவில் செட் போடப்பட்டிருப்பதால், பெரிய கட்டமைப்புகள், நடுவானில் நடக்கும் ஆக்ஷன், ரோபோ கதாபாத்திரங்கள் என பிரம்மாண்டமான காட்சிகள் அறிவியல் புனைகதை நாடகத்திற்கு வலு சேர்க்கின்றன.
கிராஃபிக்ஸ்
படத்தின் முதல் பலம் படத்தின் கிராஃபிக்ஸ். காம்ப்ளக்ஸ், அதில் இருக்கும் விஷயங்கள் என அனைத்தையும் பெரும் உழைப்பு கொடுத்து ஒவ்வொரு காட்சியையும் செதில், செதிலாக செதுக்கி இருக்கிறார்கள். இரண்டாவது படத்தின் பின்னணி இசை. சலிப்பு தட்டும் ஒவ்வொரு காட்சியையும் இரு பக்க தோள் கொடுத்து, சுவாரசியமாக்க முயன்று இருக்கிறார் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். படத்தின் கலை இயக்கம், வாயை பிளக்க வைக்கிறது.
கல்கி கி.பி.2898 படத்தை ஒரே நாளில் பார்த்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா மற்றும் 55 நிமிட கேப்பில் ட்வீட்:
இதுதொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘’ தற்போது தான் கல்கி கி.பி.2898 படத்தைப் பார்த்தேன். என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக நிறைவாக இருக்கிறது. இந்திய சினிமா வேறு நிலையைத் திறந்துள்ளது. இப்படம் ரூ.1000 கோடியை வசூலிக்கும். அன்புகள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘’ அட காட்டுத்தனமான கடவுளே, நாக் அஸ்வின் நீங்கள் ஒரு அழகான ஜீனியஸ், நம்பமுடியாதது. கல்கி படத்துக்கு வாழ்த்துகள். இந்தப் படம் அனைவருடைய அன்பையும் பெறும். புராணக் கதையில் இருக்கும் அவதாரங்கள் திரையில் வருவது எனக்கு பிடித்தமான காட்சி. கடவுளே.. என்ன படம் இது’ என்றார்.
படம் குறித்து பாஸிட்டிவான ரிவியூக்கள் வந்த நிலையில், ஜூன் 29ஆம் தேதியான இன்று ஒரே நாளில், விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் இப்படத்தைப் பார்த்ததோடு, மட்டுமல்லாமல், அடுத்தடுத்து 55 நிமிட இடைவெளியில் எக்ஸ் தளத்தில் புகழ்ந்து தள்ளியது இருவரும் ஒன்றாக சேர்ந்து படம் பார்த்தனரோ என எண்ணத்தோன்றுகிறது.
டாபிக்ஸ்