அலங்கு படக்குழுவை வாழ்த்திய விஜய்.. 69-ல் டப்பிங் பாக்கி.. விஜயை இயக்கும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.. செய்யாறு பாலு
அலங்கு படக்குழுவை வாழ்த்திய விஜய்.. 69-ல் டப்பிங் பாக்கி.. விஜயை இயக்கும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.. செய்யாறு பாலு
அலங்கு படக்குழுவை வாழ்த்திய விஜய் மற்றும் 69-ல் டப்பிங் பாக்கி மற்றும் விஜயை இயக்கும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்யாறு பாலு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’ காலம் மாறினால் காட்சிகளும் மாறும். அது சினிமாவிலும் பொருந்தும். சர்க்கார் படம் ரிலீஸ் ஆன சமயத்தில், விஜய் காரில் இருந்து இறங்கியதும் மாஸ் சீன் என்று எல்லோரும் கொண்டாடினார்கள். பல இளைஞர்கள் விஜய்யின் படத்தை செல்போனில் வால்பேப்பராக வைத்திருந்தனர். அப்போது பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏன் இப்படி சிகரெட்டோடு இருக்கீங்கன்னு விஜய்க்கு எதிர்ப்புக்குரல் கொடுத்தார்.
அடுத்து லியோ சமயத்தில் உருக்கமான கடிதம் எல்லாம் எழுதியிருந்தார், அன்புமணி ராமதாஸ். மேலும், தனக்குக் கூட உங்களைப் பிடிக்கும் ஏன் இப்படி சிகரெட் காட்சிகளில் நடிக்கிறீர்கள் எனக் கேட்டார். உடனே, பா.ம.க சினிமாவுக்கு எதிரான கட்சி எனச் சொன்னார்கள்.
இந்நிலையில் விஜய், அன்புமணி ராமதாஸின் மகள் தயாரிக்கும் படத்தின் ட்ரெய்லரை பார்த்திருக்கிறார். படக்குழுவைச் சந்தித்து இருக்கிறார். முழுக்கதையையும் கேட்டிருக்கிறார். ‘அலங்கு’ என்பது கேரள-தமிழ்நாடு இடையிலான பிரச்னையைப் பேசுகிறது. குறிப்பாக, கேரள மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டில் கொட்டப்படும் மனிதக்கழிவுகள் குறித்துப் பேசுகிறது.
அலங்கு படக்குழுவினரை பாராட்டும் முக்கியப் புள்ளிகள் - காரணம் என்ன?
பாபா பட ரிலீஸின்போது பாமகவினர் செய்த இடையூறுகளை மறந்து, ரஜினி கூட இந்த ‘அலங்கு’ படக்குழுவினரைப் பாராட்டி இருக்கிறார்.
அலங்கு படத்தில் நடித்தவர் பெரிய ஹீரோ கிடையாது. இருந்தாலும் வரிந்துகட்டிக்கொண்டு விஜய்யும், ரஜினியும் பாராட்டக் காரணம், அன்புமணியின் புதல்வி சங்கமித்ரா தான்.
வருண் தவான் நடித்திருக்கும் பேபி ஜான் படத்தை, தமிழில் கீ என்னும் பெயரில் ஜீவாவை வைத்து இயக்கிய இயக்குநர் காளீஸ் தான் இயக்கியிருக்கிறார். அட்லீ தயாரித்து இருக்கிறார். மேலும் இது தெறி படத்தின் ரீமேக் ஆகும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. வருண் தவான் வந்து கிட்டத்தட்ட 15 வருடங்களாக பாலிவுட்டில் போராடிக்கொண்டிருக்கிறார்.
விஜய் செய்த உதவி:
இதெல்லாம் மீறி, எப்படி இந்தப் படம் கனெக்ட் ஆகப்போகுது என்பதற்கு அட்லீ இந்தப் படத்தை இந்திக்கு ஏற்ற வகையில் சில சில மாற்றங்கள் செய்திருப்பதாகக் கூறியிருக்கிறார். இந்நிலையில் விஜய்யும் அந்தப் படம் குறித்த போஸ்டர்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
அப்போது அட்லீ, விஜய்யிடம் இந்தப் படத்தின் புரோமோஷனுக்கு வரமுடியுமா எனக் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் தான் வரவில்லை என்றும் கட்சிப்பணிகள் மற்றும் தனது 69ஆவது படத்தின் பணிகள் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும், ஏற்கனவே, தன்னைச்சுற்றி வட்டமடிக்கும் சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய சர்ச்சை எழ வாய்ப்பு இருப்பதால் தான் வரவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
ஒரு பக்கம் அலங்கு, மறுபக்கம் பேபி ஜான் என பட புரொமோஷனிலும் ஈடுபட்டிருக்கிறார்.
தளபதி 69ஆவது படத்தின் காட்சிகள் முடிந்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து நமக்குத் தகவல் வந்துவிட்டது. பையனூரில் இருக்கும் ஃபெப்ஸி தொழிலாளர்களின் ஸ்டுடியோவில் தான் படப்பிடிப்பு நடந்து வந்தது. அதற்குக் காரணம், அதன் அருகில் பனையூர் கட்சி அலுவலகம். பனையூர் கட்சி அலுவலகத்தில் இருந்து நீலாங்கரை வீடு.
விஜய்க்குப் பின்னணியில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!
கூடிய விரைவில் தனது 69ஆவது படத்தின் டப்பிங் பேச இருக்கிறார். வரும் ஜனவரி முதல் வாரம், மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை அறிவிக்கிறார். த.வெ.க.வில் இருக்கும் நிர்வாகிகளுக்கு இடையே குளறுபடி இருக்கிறது. அதனைக் களைய முயற்சிகள் நடக்குது. விஜய்க்கு பின்னணியில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கின்றனர்.
ஜான் ஆரோக்கிய தாஸ், ஆதவ் அர்ஜூனாவே த.வெ.க. ஐடி விங்கில் இருந்து தான் செயல்படப்போகிறார்.
இதையெல்லாம் தாண்டி, விஜய் எப்போது மக்களைச் சந்திக்கப்போகிறார் என்ற ஆவல் இருக்கிறது. அவர் மக்களைச் சந்தித்தால் கட்சியில் தீவிரமாக செயல்படுகிறார், எனப்பொருள்'' எனத் தெரிவித்தார், செய்யாறு பாலு.
நன்றி: செய்யாறு பாலு, செய்யாறு பாலு ஆபிஃஸியல் யூட்யூப் சேனல்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. இந்தக் கட்டுரையில் இடம்பெறும் கருத்துகள் அனைத்துக்கும், தகவல்களுக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பாகாது.
டாபிக்ஸ்