Aparna Vinod: "பிரியாம இருப்பேனே" என சொன்னவர்.. ரெண்ட வருஷத்தில் கசந்த திருமண உறவு! கணவனை பிரிந்த விஜய் பட நடிகை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aparna Vinod: "பிரியாம இருப்பேனே" என சொன்னவர்.. ரெண்ட வருஷத்தில் கசந்த திருமண உறவு! கணவனை பிரிந்த விஜய் பட நடிகை

Aparna Vinod: "பிரியாம இருப்பேனே" என சொன்னவர்.. ரெண்ட வருஷத்தில் கசந்த திருமண உறவு! கணவனை பிரிந்த விஜய் பட நடிகை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 22, 2025 05:57 PM IST

Aparna Vinod Divorce: “உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா” நிச்சயதார்த்தம் முடிந்ததை காதல் பொங்கும் பதிவுடன் பகிர்ந்திருந்தார் நடிகர் அபர்ணா வினோத். தற்போது இந்த பதிவையும் தனது இன்ஸ்டாவில் இருந்து நீக்கிவிட்டார்.

 "பிரியாம இருப்பேனே" என சொன்னவர்.. ரெண்ட வருஷத்தில் கசந்த திருமண உறவு! கணவனை பிரிந்த விஜய் பட நடிகை
"பிரியாம இருப்பேனே" என சொன்னவர்.. ரெண்ட வருஷத்தில் கசந்த திருமண உறவு! கணவனை பிரிந்த விஜய் பட நடிகை

இதையடுத்து அபர்ணா வினோத்துக்கும், கேரளா மாநிலம் கோழிக்கூடு பகுதியை சேர்ந்த ரினில் ராஜ் என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் தற்போது கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார்.

அபர்ணா வினோத் எமோஷனல் பதிவு

கடந்த 2023இல் ரினில் ராஜ் என்பவரை திருமணம் செய்தார் நடிகை அபர்ணா வினோத். திருமணத்துக்கு பின்னர் நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தார். இதைத்தொடர்ந்து கணவரை பிரிந்துவிட்டதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் எமோஷனல் பதிவை பகிர்ந்திருக்கும் அபர்ணா வினோத், " அன்புள்ள நண்பர்கள் மற்றும் பாலோயர்களுக்கு, நான் உங்களிடம் ஒரு விஷயத்தை பகிர விரும்புகிறேன். சமீபத்தில் எனது வாழ்க்கையில் மிக பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

மிகுந்த யோசனைக்குப் பிறகு என் திருமண உறவை முறிக்க முடிவு செய்தேன். இது எளிதான முடிவு இல்லை என்றாலும், இதுதான் எனது வளர்ச்சிக்கும், காயத்தில் இருந்து குணம் பெறவும் சரியான தீர்வு என நம்புகிறேன்.

முன்னேற்றத்துக்கு இதுதான் சரி

எனது திருமணம் உணர்ச்சி ரீதியாக சோர்வடைய வைத்ததோடு, கடினமான கட்டத்தை தந்தது. எனவே அந்த அத்தியாயத்தை முடித்து அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு செல்ல முடிவெடுத்துள்ளேன். இந்த நேரத்தில் எனக்குக் கிடைத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நம்பிக்கையுடனும் நேர்மறையுடனும் வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றும் முடிந்துள்ளதாக இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வில் குடும்பத்தினர், நண்பர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழில் காதலை வெளிப்படுத்திய அபர்ணா

கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும், ரினில் ராஜ் உடன் திருமணம் நிச்சயதார்த்தம் ஆனதை "💕உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா💍" என அழகு தமிழில் குறிப்பட்டிருந்தார். அத்துடன் தனது நிச்சயாத்ர்த்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். கணவரை பிரிவதாக அறிவித்திருக்கும் நிலையில், தனது கணவருடனான பழைய பதிவுகள் அனைத்தும் இன்ஸ்டாவில் இருந்து நீக்கியுள்ளார்.

மலையாள சினிமாவான எஞ்ஞான் நின்னோடு கூடேயுண்டு என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமா அறிமுகமான அபர்ணா வினோத், பின்னர் ஹோகினூர் என்ற மலையாள படத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து தமிழில் தளபதி விஜய் நடித்த பைரவா படத்தில் அறிமுகமாகி, தெடர்ந்து பரத் ஜோடியாக நடுவன் என்ற படத்திலும் நடித்தார். இதுவரை நான்கு படங்களில் நடித்துள்ள இவர், சில மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக நாடகங்களில் தனது மெத்தட் ஆக்டிங்குக்காகவும், அர்பணிப்புக்காகவும் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

கேரளாவில் பிஎஸ்சி சைக்காலஜியும், சென்னையில் உள்ள மெட்ராஸ் பல்கலைகழகத்தில் எம்எஸ்சி சைக்காலஜி படித்தவராகவும் உள்ளார் நடிகை அபர்ணா வினோத், திருமணத்துக்கு பின்னர் நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தாலும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வந்துள்ளார். இன்ஸ்டாவிக் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலோயர்களை கொண்டவராகவும் உள்ளார்.

ரெண்டே ஆண்டுகளில் திருமண உறவு கசந்த நிலையில் கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார். தற்போது அவர் மீண்டும் சினிமாவுக்கு கம்பேக் கொடுக்கவுள்ளாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

 

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.