பஹல்காம் தாக்குதல் குறித்த சர்ச்சைக்கருத்து.. ‘தவறாக புரிந்து கொண்டவர்களின் கவனத்திற்கு’ - விஜய் ஆண்டனி மறுஅறிக்கை!
காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த, அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். - விஜய் ஆண்டனி மீண்டும் அறிக்கை!

பஹல்காம் தாக்குதல் குறித்த சர்ச்சைக்கருத்து.. ‘தவறாக புரிந்து கொண்டவர்களின் கவனத்திற்கு’ - விஜய் ஆண்டனி மறுஅறிக்கை!
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பஹல்காம் தாக்குதல் குறித்து நேற்று கருத்து ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்தக்கருத்தில், ‘காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும் பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.