தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vijay Antony Clarification About Jesus Controversy Talk

Vijay Antony: ’இயேசுவை பற்றி நான் தவறாக பேசினேனா.. ’ - விஜய் ஆண்டனி கொடுத்த விளக்கம்!

Aarthi Balaji HT Tamil
Mar 16, 2024 06:54 PM IST

மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவை பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது என விஜய் ஆண்டனி விளக்கம் கொடுத்தார்.

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது செய்தியாளர் ஒருவர் ரோமியோ படத்தின் போஸ்டரில் பெண் மது அருந்துவது போல ஒரு காட்சி வைக்கப்பட்டு இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு, பதிலளித்த விஜய் ஆண்டனி, “ஆண், பெண் இருவரும் மது அருந்துவது ஒன்று தான். இருவருக்கும் இதில் வேறுபாடு கிடையாது. மது என்பது அந்த காலத்தில் இருந்து இருக்கிறது.

இயேசு கூட மது அருந்தி இருக்கிறார். அப்போது இதற்கு பெயர் வேறு தற்போது இதற்கு பெயர் வேறு. படத்திற்காக காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளது அவ்வளவு தான்” என கூறினார்.

விஜய் ஆண்டனியின் பேச்சுக்கு கிறிஸ்தவ சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில், “ உலகமெங்கும் இருக்கும் அனைத்து கிறிஸ்தவ மக்களாலும், சாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினரும் போற்றக்கூடியவர் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து.

கிறிஸ்தவர்களையும், இயேசு கிறிஸ்துவையும் இழிவுப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் ஆண்டனி பேசியிருக்கிறார். திராட்சை ரசத்தை மதுவுடன் ஒப்பிட்டு இயேசு குடிப்பார் என எவ்வித ஆதாரமும் இல்லாமல் பேசி இருக்கிறார்.

இயேசு கிறிஸ்து மது குடித்தார் என பொது வெளியில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லை என்றால் அவரது வீட்டின் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என குறிப்பிட்டு உள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து உள்ளார். 

அதில் “நான் முன்தினம் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், திராட்சை ரசம் தற்போது கண்டு பிடிக்கப்பட்டது அல்ல, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்தது தான். தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது. இயேசு பிரான் பயன்படுத்தி இருக்கிறார், என்று கூறி இருந்தேன்.

ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளைத் தொடர்ந்து, நான் பேசியதை இணைத்து, தவறாக அர்த்தபடுத்தியதால், உங்களைப்போன்ற சிலர் மனம் புண் பட்டிருக்கிறீர்கள் என்பது, எனக்கு வேதனை அளிக்கிறது. 

நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவை பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது.” என குறிப்பிட்டு இருக்கிறார். 

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு, பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் ஆகிய படங்கள் ரிலீஸானது. இன்னும் அக்னி சிறகுகள் படம் வெளியாகவில்லை. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்