தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rashmika Mandanna Best Onscreen Pair: விஜய் முதல் விஜய்தேவரகொண்டா வரை: ராஷ்மிகாவுக்கு சிறந்த ஜோடி யார்?

Rashmika Mandanna Best OnScreen Pair: விஜய் முதல் விஜய்தேவரகொண்டா வரை: ராஷ்மிகாவுக்கு சிறந்த ஜோடி யார்?

Marimuthu M HT Tamil
Apr 05, 2024 06:19 PM IST

Rashmika Mandanna Best OnScreen Pair: ராஷ்மிகா மந்தனாவின் 28ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சினிமாவில் அவருடன் நல்ல கெமிஸ்ட்ரியுடன் நடித்த நடிகர்கள் குறித்துப் பார்க்கலாம்.

Rashmika Mandanna Best OnScreen Pair: விஜய் முதல் விஜய்தேவரகொண்டா வரை: ராஷ்மிகாவுக்கு சிறந்த ஜோடி யார்?
Rashmika Mandanna Best OnScreen Pair: விஜய் முதல் விஜய்தேவரகொண்டா வரை: ராஷ்மிகாவுக்கு சிறந்த ஜோடி யார்?

ட்ரெண்டிங் செய்திகள்

தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு சமூக ஊடகங்களில் நன்றி தெரிவித்துள்ள ராஷ்மிகா மந்தனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் எனத் தகவல் பரவி வருகிறது. இது ஒருபுறம் இருக்க ராஷ்மிகாவின் பிறந்த நாளுக்கு, விஜய் தேவரகொண்டா போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்து இருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.

இதுகுறித்த உறுதிப்படுத்தலுக்காக நாம் காத்திருக்கும் அதேவேளையில், ராஷ்மிகா மந்தனா, தனது சினிமாவில் காதலியாக நடித்து, நம்மை வென்ற தருணங்களை திரும்பிப் பார்ப்போம். ராஷ்மிகாவுடன் நல்ல கெமிஸ்டிரியில் நடித்த நடிகர்களின் பட்டியல் இங்கே..

விஜய் தேவரகொண்டா:

ராஷ்மிகா மந்தனாவின், வதந்தி காதலன் பட்டியலில் முதலிடத்தில் விஜய் தேவரகொண்டா இருக்கிறார். 

கீதா கோவிந்தம் (2018) மற்றும் டியர் காம்ரேட் (2019) போன்ற படங்களில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின், ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி உண்மையில் அவர்களின் நிஜ வாழ்க்கை காதல் கதையின் பிரதிபலிப்பு என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள். 

பட புரோமோசனில் கூட,  விஜய் தேவரகொண்டா ஒரு தொலைபேசி அழைப்பில் 'என்ன ஆச்சு' என்று கேட்டபோது, ராஷ்மிகா மந்தனா வெட்கப்பட்டார். 

புஷ்பா: புஷ்பா தி ரைஸ் (2021) படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று, அல்லு அர்ஜூனின் ரவுடி லுக்குக்கு, ஸ்ரீவள்ளி என்கிற சமாதானமான கேரக்டர் லுக்கில் ராஷ்மிகா தோன்றி அசத்தியிருப்பார். இப்படத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகாவின் கெமிஸ்ட்ரி பலரின் இதயங்களைத் தொட்டது. ஏனெனில் அது மிகவும் உறுதியாக இருந்தது. இந்நிலையில் புஷ்பா 2: தி ரூல் படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரியைப் பார்க்க பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

அனிமல் ரன்பீர் கபூர்: சந்தீப் ரெட்டி வங்காவின் சமீபத்திய பிளாக்பஸ்டர் அனிமல் படம். இந்தப் படத்தில் ராஷ்மிகாவையும் அவரது கதாபாத்திரத்தையும் ட்ரோல் செய்தவர்கள் பலர் உள்ளனர். 

ஆனால், பாலிவுட்டில் ரன்பீர் கபூருடனான ராஷ்மிகா மந்தனாவின் கெமிஸ்ட்ரி தூய்மையாக இருந்தது. நம்மில் சிலருக்கு ரன்பீர் கபூரின் கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்றாலும், பெரும்பான்மையான ரசிகர்களுக்கு ராஷ்மிகா மற்றும் ரன்பீர் கபூரின் ஜோடி திரையில் ரசிக்கும் வகையில் இருந்தது. 

மகேஷ் பாபு:

2020ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அதிரடி நகைச்சுவை படம், ’சரிலேரு நீகேவ்வரு’ படத்தில் மகேஷ் பாபு என்கிற மேஜர் அஜய் கிருஷ்ணா மீது தொடர்ந்து காதல் மயக்கத்தில் இருக்கும் சமஸ்கிருதி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். ஆனால், படத்தில் ராஷ்மிகா கூச்சமில்லாமல் காதலிப்பது உண்மையில் அழகாக இருந்தது. ராஷ்மிகா மற்றும் மகேஷ் ஒரு அழகான ஜோடியாக நம்மை உணரவைத்தனர். அவர்களை நாங்கள் மீண்டும் ஒன்றாக பார்க்க விரும்புகிறோம் என்று ரசிகர்கள் தெரிவித்தனர். 

விஜய்: ராஷ்மிகா மற்றும் விஜய் ஆகியோர் இணைந்து 2023ஆம் ஆண்டு வாரிசு படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானபோது, ராஷ்மிகாவும் மந்தனாவும் ஒரு அபிமான திரை ஜோடியை உருவாக்குவார்கள் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். அந்த கணிப்புகள் திரையரங்கில் நிரூபிக்கவும்பட்டது. 

ராஷ்மிகா மந்தனா நிஜ வாழ்க்கையில் விஜய்யின் ரசிகை. அது அவர்கள் ஒன்றாக வரும் அனைத்து காட்சிகளிலும் பிரகாசித்தது. மேலும் வாரிசு படத்தில் இருவரது டான்ஸும் பலரையும் ஈர்த்தது.

ராஷ்மிகா மந்தனாவின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்டிரியில் உங்களுக்குப் பிடித்தது யார் என்பதை கமெண்ட் செய்யுங்களேன். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்