Tamil News  /  Entertainment  /  Vijay And Shahrukh Khan Joins In Atlee Birthday Party
இயக்குநர் அட்லீ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய், ஷாருக் கான்
இயக்குநர் அட்லீ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய், ஷாருக் கான்

Atlee birthday celebration: இயக்குநர் அட்லீ பிறந்தநாளில் விஜய்,ஷாருக் கான்

23 September 2022, 13:08 ISTAarthi V
  • Share on Twitter
  • Share on FaceBook
23 September 2022, 13:08 IST

இயக்குநர் அட்லீ தனது பிறந்தநாள் ஸ்பெஷல் படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். 

இயக்குநர் அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து ஜவான் என்ற இந்தி படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் வேலைகளை முடித்துவிட்டு விஜய் பட வேலைகளை அட்லீ தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ட்ரெண்டிங் செய்திகள்

இயக்குநர் அட்லீ சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவருக்கு ஏகப்பட்ட நபர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். 

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இயக்குநர் அட்லீ ஸ்பெஷல் படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

அதில், அவர் நடுவில் நிற்க ஒருபுறம் விஜய்யும், மறுபுறம் ஷாருக்கானும் நிற்கின்றனர். அந்த படத்தை அட்லீ தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

அதில், “இதைவிட நான் எனது பிறந்தநாளில் வேறென்ன கேட்க முடியும். இவர்கள் தான் என் வாழ்வின் தூண்கள். எனது அன்புக்குரிய ஷாருக்கான். என்னோட அண்ணே தளபதி” என்று பதிவிட்டுள்ளார்.

ஜவான் படத்தின் ஷூட்டின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஷாருக் கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோ பாபு, பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். 

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஷாருக்கான் தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள ஆதித்ய ராம் பிலிம் ஸ்டூடியோவில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.

  • Share on Twitter
  • Share on FaceBook

டாபிக்ஸ்