Bussy Anand: 2026 தேர்தலில் விஜய் நா.த. கட்சியோடு கூட்டணியா அமைக்கப்போகிறீரா? - புஸ்ஸி ஆனந்த் விளக்கம்!
Bussy Anand: மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தினந்தோறும் எங்களுக்கு அறிவுரை கூறுவார். - புஸ்ஸி ஆனந்த் விளக்கம்!

புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் புதிய கட்சி அலுவலகத்தை தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணியா?
கேள்வி: பிரதமர் மோடி 3 வது முறையாக பொறுப்பேற்பது பற்றி?
பதில்: எதுவாக இருந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தான் பதில் அளிப்பார்.
கேள்வி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைக்குமா?
பதில்: மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தினந்தோறும் எங்களுக்கு அறிவுரை கூறுவார். அதன் படி, நாங்கள் 2026ம் ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலை இலக்காக வைத்து அதை நோக்கி செல்கிறோம். நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி வைப்பது குறித்து எங்களுடைய தலைவர் விஜய் அறிவிப்பார்
2026ம் ஆண்டு தேர்தலே இலக்கு
முன்னதாக, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்குத் தீனிபோடும் விதமாக, சமீபத்தில் ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப் பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான தளபதி மக்கள் இயக்கம் அப்படியே, அவரது கட்சியாக மாறியது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டுவிட்டாலும், தமிழக வெற்றிக் கழகம் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தனது அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியிருந்தார். அதே நேரத்தில் 2026 சட்டமன்றத்தேர்தலில் விஜய் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் தெரிவித்திருந்தார். இதன் மூலம் விஜய்யின் குறிக்கோள் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பது தெளிவாகத் தெரிகிறது.
2 கோடி உறுப்பினர்களே இலக்கு
அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில், உறுப்பினர் சேர்க்கையில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து வேலை செய்துவருகின்றனர், அக்கட்சி நிர்வாகிகள். மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக , ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்னும் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கான உறுப்பினர் சேர்க்கையை கடந்த மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது.
தொடங்கிய மூன்றே நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தவிர, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் மாநிலக் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழத்தின் தலைவருமான விஜய்யும் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
நடிகர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘’நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்