புஷ்பா புருஷன் நான் இல்லைங்க.. கூட வந்தவர்.. புதுச்சேரி ஹோட்டலை விலைக்கு கேட்ட சர்ச்சை.. விளக்கமளித்த விக்னேஷ் சிவன்
புஷ்பா புருஷன் நான் இல்லைங்க.. கூட வந்தவர்.. புதுச்சேரி ஹோட்டலை விலைக்கு கேட்ட சர்ச்சை.. விளக்கமளித்த விக்னேஷ் சிவன் பற்றி பார்ப்போம்.

கோலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோர் வலம் வருகிறார்கள். தினமும் இவர்களைப் பற்றி ஏதாவது சர்ச்சைப் பேச்சுகள், உலவி லைம்லைட்டிலேயே இருந்து வருகின்றனர். அதற்கு ஒரு சிறந்த உதாரணம், சமீபத்தில் நடிகர் தனுஷுக்கு எதிராக, நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதில் கிடைத்த நெட்டிசன்களின் எதிர்வினையால் தனது எக்ஸ் தள அக்கவுண்டில் இருந்தே விக்னேஷ் சிவன் வெளியேறினார்.
இதையடுத்து சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள அரசுக்குச் சொந்தமான ஹோட்டலை இயக்குநர் விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக தகவல்கள் கிளம்பி, மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
உடனே நெட்டிசன்கள், ஒரு அரசு சொத்தினை விலைக்கு வாங்க முடியாது என்ற அடிப்படை அறிவுகூட விக்னேஷ் சிவனுக்குக் கிடையாது என வசைபாடினர், நெட்டிசன்கள்.