நயன்தாராவுக்கு 2 கலக்கி! ஆர்டர் போட்ட விக்னேஷ் சிவன்!ஆவணப்படத்தில் அவரே சொன்ன சீக்ரட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நயன்தாராவுக்கு 2 கலக்கி! ஆர்டர் போட்ட விக்னேஷ் சிவன்!ஆவணப்படத்தில் அவரே சொன்ன சீக்ரட்!

நயன்தாராவுக்கு 2 கலக்கி! ஆர்டர் போட்ட விக்னேஷ் சிவன்!ஆவணப்படத்தில் அவரே சொன்ன சீக்ரட்!

Suguna Devi P HT Tamil
Nov 18, 2024 11:33 AM IST

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நயன்தாரா குறித்த ஆவணப்படத்தில் பல சுவாரசிய தகவல்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

நயன்தாராவுக்கு 2 கலக்கி! ஆர்டர் போட்ட விக்னேஷ் சிவன்!ஆவணப்படத்தில் அவரே சொன்ன சீக்ரட்!
நயன்தாராவுக்கு 2 கலக்கி! ஆர்டர் போட்ட விக்னேஷ் சிவன்!ஆவணப்படத்தில் அவரே சொன்ன சீக்ரட்!

தனுஷ் உடன் மோதல் 

நயன் விக்கி திருமண வீடியோ ஆவனப்படமாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள நிலையில். இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. முதலில் திருமணம் ஆனதும் இந்த வீடியோ வெளியாகவில்லை. அதற்கும் பல காரணங்களும் கூறப்பட்டு வந்தன. ஆனால் சில நாட்களுக்கு முன் இதன் முன்னோட்டம் வெளியானது. அப்போதில் இருந்து தான் பெரிய சர்ச்சை தொடங்கியது. இதில் இடம் பெற்றுள்ள சில வினாடிகள் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் மீது காப்புரிமை பிரச்சனை தொடங்கியது. 

இது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிற்கு காப்புரிமைக்கு பணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில் ரூ.10 கோடி கேட்டு இருந்தார். மேலும் இது குறித்து நயன்தாரா மிகவும் காட்டமாக பதில் அளித்து இருந்தார். இதற்கு வெறும் 3 நொடி வீடியோவிற்கு 10 கோடி கேட்பதா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ் பலர் நயன்தாராவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

சுவாரசிய தகவல்கள்

இன்று வெளியான நயன்- விக்கி திருமண வீடியோவில் இருவரும் பல தகவல்களை பகிர்ந்து இருந்தனர். அதில் விக்னேஷ் சிவன் கூறுகையில், நயன்தாரா ஒரு சரியான ஃபுட்டீ  வெளியில் பார்ப்பதற்கு தான் உணவுக் கட்டுபாடு இருப்பவர் போலத் தெரியும்.  ஆனால் எல்லாவற்றையும் விரும்பி சாப்பிடுவதில் மிகவும் கை தேர்ந்தவர் ஆக இருப்பார் எனவும் தெரிவித்தார். 

நயன்தாரா அவரது முன்னாள் காதல் குறித்தும் பகிர்ந்து கொண்டார். அதில் சிம்பு மற்றும் பிரபுதேவா குறித்தும் பேசியுள்ளார். அதிலும் குறிப்பாக பிரபு தேவாவை காதலித்த போது அவர் படங்களில் நடிக்க வேண்டாம் எனக் கூறியதாகவும், அதனால் அவர் கூறியதை அப்படியே செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் நான் தேர்ந்தெடுத்தவர்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், அது முழுக்க ஏமாற்றம் அடைந்து விட்டதாகவும் நயன் தெரிவித்தார். மேலும் ஒரு உறவில் இருந்து இருவர் பிரிந்து விடுகிறார்கள் என்றால் உடனே பெண்ணை தான் குறை சொல்கிறார்கள். மேலும் அந்த ஆணிடம் சென்று என்ன நடந்தது என்று கூட கேட்பதில்லை எனவும் தெரிவித்தார். இறுதியாக விக்னேஷ் சிவன் உடனான காதலே தனக்கு கிடைத்த நல்ல விஷயம் எனவும், இது என் அம்மாவின் பிரார்த்தனையால் நடந்ததாகவும் அவர் அம்மா நம்புவதாகவும் தெரிவித்தார்.       

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.