Nayan and Vignesh Shivan: Unfollow செய்த நயன்தாரா! நயனின் மறைமுக இன்ஸ்டா பதிவு - விளக்கம் அளித்த விக்னேஷ் சிவன்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் பிரிந்துவிட்டதாக பரவிய வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நயனின் மறைமுக இன்ஸ்டா பதிவுக்கு விளக்கம் அளித்துள்ளார் அவரது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன்

கோலிவுட் சினிமாவின் ஸ்டார் தம்பதிகளாக இருந்து வரும் நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன், சுமார் 9 ஆண்டுகளுக்கு மேலாக காதல் உறவில் இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கடந்த 2022இல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் வாடகைத்தாய் மூலம் இரட்டையர்களை பெற்றெடுத்தார்கள். இவர்களின் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோ நீல் என் சிவன், உலக் தாய்விக் என் சிவன் என பெயர் வைத்துள்ளனர்.
எவ்வித தயக்கமும் இல்லாமல் இந்த ஜோடி தங்களுக்கு இடையே இருக்கும் அன்பு, காதலை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அத்துடன் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவி நயன்தாரா செய்யும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் தனது ஆதரவையும், பாராட்டையும் தெரிவிப்பதில் முதல் ஆளாக இருந்து வந்தார்.
இதையடுத்து சமீபத்தில் இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கினார் நயன்தாரா. சில மணி நேரங்களிலேயே அவர் பின் தொடர்வோர் எண்ணிக்கையானது மில்லியன்களை கடந்தது. இதைத்தொடர்ந்து நயன்தாரா இன்ஸ்டாவில் தனது கணவரான விக்னேஷ் சிவனை Unfollow செய்திருப்பதோடு, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் மறைமுகமாக கருத்தை வெளிப்படுத்தும் விதமாக "அவள் தனது கண்களில் கண்ணீருடன் 'எனக்கு இது கிடைத்தது' என்று எப்போதும் சொல்லப் போகிறாள்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பார்த்த பலரும் நட்சத்திர தம்பதிகளான நயன் - விக்னேஷ் பிரியபோகிறார்கள் என வதந்தி பரவியது. தற்போது அதற்கு பதில் அளிக்கும் விதமாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "பிரபல விருது நிகழ்ச்சி ஒன்றின் டைட்டில் ஸ்பான்சராக நயன்தாராவின் சரும பராமரிப்பு பிராண்ட் செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே விக்னேஷ் சிவனை, நயன்தாரா Unfollow செய்திருப்பது ஏதேனும் தொழில்நுட்ப பிழையாக இருக்கலாம் எனவும், அது சரிச்செய்யப்படும் எனவும் இணைவாசிகள் சில தங்களுக்கு தானா ஆறுதல் படுத்திக்கொண்டுள்ளனர்.
நயன்தாராவின் 75வது படமாக கடந்த டிசம்பரில் வெளியான அன்னப்பூரணி பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக வசூலிக்காவிட்டாலும். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. விக்னேஷ் சிவன் இயக்கி வரும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து வரும் நயன்தாரா இன்னும் சில படங்களில் கமிட்டாகியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்