நயன்தாராவுடன் வாழ்க்கை.. ஒத்த வார்த்தையால் கோலிவுட் நடிகர்களை தாக்கிய விக்னேஷ் சிவன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நயன்தாராவுடன் வாழ்க்கை.. ஒத்த வார்த்தையால் கோலிவுட் நடிகர்களை தாக்கிய விக்னேஷ் சிவன்!

நயன்தாராவுடன் வாழ்க்கை.. ஒத்த வார்த்தையால் கோலிவுட் நடிகர்களை தாக்கிய விக்னேஷ் சிவன்!

Malavica Natarajan HT Tamil
Nov 05, 2024 03:00 PM IST

பல இடங்களில் பல சம்பவங்கள் நடக்கும் போது இங்கு நானும் நயன்தாராவும் ஒற்றுமையாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரது திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

நயன்தாராவுடன் வாழ்க்கை.. ஒத்த வார்த்தையால் கோலிவுட் நடிகர்களை தாக்கிய விக்னேஷ் சிவன்!
நயன்தாராவுடன் வாழ்க்கை.. ஒத்த வார்த்தையால் கோலிவுட் நடிகர்களை தாக்கிய விக்னேஷ் சிவன்!

சம்பவம் செய்த விக்னேஷ் சிவன்

இந்நிகழ்வில் பங்கேற்ற இயக்குநரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தொகுப்பாளரான பாவனா, எல்லோருக்கும் 2016ம் ஆண்டு நடைபெற்ற சைமா விருது விழா நினைவிருக்கும். ஏனென்றால், இந்த மேடையில் ஒரு சம்பவம் நடந்தது. முதல் முறையாக விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து வருகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியவந்தது. அப்போது நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் பேசியதை பிளாஷ் பேக்காக பார்க்கலாம் எனக் கூறி ஒரு வீடியோவை ஒளிபரப்பினார்.

அந்த வீடியோவில், நயன்தாராவை ஒருமுறை நேரில் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று தான் நான் நினைத்தேன். ஆனால், இந்தப் படத்தின் கதை மேல் அவருக்கு காதல் வந்துவிட்டது. அவர் தற்போது வரை எனக்கு பக்கபலமாக இருக்கிறார். அதை நினைத்து பெருமைப்படுகிறேன் எனக் கூறியிருந்தார்.

பல சம்பவத்திற்கு மத்தியில் ஒன்றாக இருப்பது சந்தோஷம்

பின், இந்த வீடியோவை பார்த்த விக்னேஷ் சிவன் தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும், பல இடங்களில் பல சம்பவங்கள் நடந்து வருகிறது. ஒற்றுமையா ரெண்டு பேர் இருக்கோம்ங்குறதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

வெடித்த குழப்பம்

இவர் பல இடங்களில் பல சம்பவம் எனக் கூறியது, இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளையா அல்லது தொடர்ந்து சினிமா பிரபலங்கள் தங்களது திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டு விவாகரத்து வாங்கி வருகின்றனர் அதைக் கூறுகிறாரா எனத் தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

விருது பெற்ற நயன்தாரா, விக்னேஷ் சிவன்

முன்னதாக, சைமா விருது நிகழ்வில், ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த அன்னபூரணி படத்தில் நடித்ததற்காக நயன்தாரா சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றார். இந்த விருதை அவர் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பெற்றுக் கொண்டார்.

அப்போது, நயன்தாராவை பாராட்டி பாடல் எல்லாம் பாடிய விக்னேஷ் சிவன், அவரது நெற்றியில் முத்தமிட்டு தனது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். இந்தப் புகைப்படத்தை வெளியிட்ட சைமா, இவர்கள் இருவரையும் உண்மையான சக்திவாய்ந்த ஜோடி எனவும், இருவரும் சைமாவின் தகுதியான விருதுகளைப் பெற்று இந்த இரவை சாதனையுடன் கொண்டாடினர் எனக் குறிப்பிட்டது.

சைமா விருது விழாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில், ரத்தமாரே பாடலை எழுதியதற்காக விக்னேஷ் சிவனுக்கு சிறந்த பாடலாசிரியர் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வச்சு செய்த யோகிபாபு

இதே விழாவில் பேசிய யோகிபாபு, விக்னேஷ் சிவன் நயன்தாராவை காதலித்ததற்காக கிண்டல் செய்துள்ளார். படத்துக்கு கதை சொல்ல போன இடத்துல இப்படி கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்குறியே உன் வாழ்க்கை டாப்பு பா எனக் கூறி இருவரையும் வாழ்த்தினார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும்போது தான் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலிக்கத் தொடங்கினர். பின், இவர்கள் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதுடன் வாடகைத் தாய் மூலம், இரட்டை ஆண்குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களுக்கு உயிர் மற்றும் உலக் எனப் பெயரிட்டுள்ளனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.