நெகட்டிவிட்டிய தள்ளி வைங்க! விக்கியின் புத்தாண்டு வாழ்த்து! புர்ஜ் கலிபாவில் கொண்டாட்டம்!
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவர்களது புத்தாண்டு கொண்டாடத்தை புர்ஜ் கலிபாவின் முன் கொண்டாடியதாக போட்டோ வெளியிட்டுள்ளனர். இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகெங்கிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புகழ்பெற்ற இடங்களில் துபாயின் புர்ஜ் கலிஃபாவும் ஒன்று. இங்கு திரையிடப்படும் டிஜிட்டல் ஒளி நிகழ்ச்சிகள் அனைவரையும் மிகவும் கவரும் வகையில் இருக்கும். இந்த நிலையில் இந்த புர்ஜ் கலிபா கொண்டாட்டத்திற்கு பல திரையுலக பிரபலங்களும் போவது வழக்கம். இந்த வருடம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவர்களது புத்தாண்டு கொண்டாடத்தை புர்ஜ் கலிபாவின் முன் கொண்டாடியதாக போட்டோ வெளியிட்டுள்ளனர். இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர் சர்ச்சை
2024 முழுவதும் சர்ச்சைகளுக்கு குறையில்லாமல் இவர்கள் இருவரது வாழ்க்கையும் சென்றிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இவர்களது திருமண வீடியோ ஆனது அதற்கு தொடக்கப் புள்ளியாக இருந்தது. அதில் இணைக்கப்பட்டிருந்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தான் அதற்கு முக்கிய காரணம். தனுஷ் அதற்கு நஷ்ட ஈடு கேட்டு வழக்கும் தொடர்ந்து இருந்தார். மேலும் நயன்தாரா தனுஷை குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு நெட்பிளிக்சில் திருமண வீடியோவை பல கோடிகளுக்கு பேரம் பேசி இருந்த நயன்தாராவால் தனுஷ் கேட்கும் தொகையை வழங்க முடியாதா? எனவும் பல நெட்டிசன்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கலாய்த்து வந்தனர். மேலும் விக்னேஷ் சிவன் சமீபத்தில் புதுச்சேரி அமைச்சரை சந்தித்தபோது அரசாங்க ஹோட்டலை விலைக்கு கேட்டதாகவும் தகவல் பரவியது. மேலும் அந்த ஹோட்டலை அவர் விலைக்கு கேட்கவில்லை என அமைச்சர் விளக்கம் அளித்திருந்த போதிலும் அதனை நெட்டிசன்கள் யாரும் கண்டு கொள்வதாக இல்லை. தற்போது வரை விக்னேஷ் சிவனை கலாய்த்து கொண்டு உள்ளனர்.