தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ar Murugadoss Sk 23: விஜய் ரூட்டில் சிவாவிற்கு ஸ்கெட்ச்; துப்பாக்கி வில்லனை கமிட் செய்த முருகதாஸ்!

AR Murugadoss SK 23: விஜய் ரூட்டில் சிவாவிற்கு ஸ்கெட்ச்; துப்பாக்கி வில்லனை கமிட் செய்த முருகதாஸ்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 09, 2024 07:41 PM IST

AR Murugadoss SK 23: சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் துப்பாக்கி வில்லன் கமிட் செய்யப்பட்டு இருக்கிறார்.

AR Murugadoss SK 23: விஜய் ரூட்டில் சிவாவிற்கு ஸ்கெட்ச்; துப்பாக்கி வில்லனை கமிட் செய்த முருகதாஸ்!
AR Murugadoss SK 23: விஜய் ரூட்டில் சிவாவிற்கு ஸ்கெட்ச்; துப்பாக்கி வில்லனை கமிட் செய்த முருகதாஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

புதிய சிவகார்த்திகேயன் 

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் கோலாகலமாக கோலாகலமாக துவங்கியது. ஆக்சன் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாக இருக்கும் இந்தப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை திரையில் தோன்றிராத மிக வித்தியாசமான ஸ்டைலீஷ் தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக, இப்படத்தைத் தயாரிக்கிறது.  ஒளிப்பதிவாளர் சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளைக் கவனிக்க, அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டைக்காட்சிகளை மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்கவுள்ளார்.

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி முறிவு

தமிழ் சினிமாவில் மணிரத்னம், ஷங்கர் ஆகியோருக்கு அடுத்த படியான இடத்தில் முன்னணி இயக்குநராக இருப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ். விஜயின் கேரியர் அதளபாதளத்தில் தொங்கி கொண்டிருந்த போது துப்பாக்கி என்ற படத்தை கொடுத்து தூக்கிபிடித்தவர், அடுத்ததாக கத்தி படத்தில் விஜயை இன்னும் ஷார்ப் செய்து அவர் இழந்த இடத்தை மீட்டுக்கொடுத்தார்.

தொடர்ந்து இருவரும் சர்காரில் இணைந்து, அதிமுக ஆட்சியை பந்தாட நினைக்க, அந்த படம் எதிர்பார்த்த அளவில் செல்லவில்லை. அடுத்தாகவும் விஜயுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணைகிறார் என்பது உறுதியான நிலையில், அந்த படத்திற்காக தன்னுடைய ஒரு வருடத்தை கொடுத்தார் முருகதாஸ். ஆனால் அந்த படம் நடக்கவில்லை. 

இந்த நிலையில் கலாட்டா ப்ளஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஏ.ஆர்.முருகதாஸிடம் ஒரு சில படங்கள் ஓட வில்லை என்றால், பெரிய நடிகர்கள் ஓடி விடுகிறார்களே என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.முருகதாஸ், “ எல்லோருமே அவர்களுக்கான இடத்தை இங்கு போராடி தான் பிடித்திருக்கிறார்கள். அதுதான் உண்மை. நான் நம்பர் ஒன் ஹீரோ வேண்டும் என்று ஆசைப்படும் பொழுது, அவர்களும் அன்றைய காலகட்டத்தில் யார் நம்பர் ஒன்றாக இருக்கிறார்களோ அவருடன் இணையவே விருப்பப்படுவார்கள்.

ஆகையால் ஒருமுறை அந்தக் கதாநாயகனுக்கு நம் மீது நம்பிக்கை குறையும் பட்சத்தில், அந்த நம்பிக்கை திரும்ப வருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை தான் செய்ய வேண்டுமே ஒழிய நான் அவர்களுக்கு அப்படி செய்தேனே…இப்படி செய்தேனே.. என்றெல்லாம் சொல்லக்கூடாது.

நாம் 10 வருடங்களுக்கு முன்பாக நல்ல படம் செய்தோமா என்பது முக்கியமில்லை; இன்று நல்ல படத்தை கொடுக்கிறோமோ என்பது தான் முக்கியம். நமக்கு ஒரு புதுமுக நடிகரை வைத்து படம் இயக்க விருப்பம் இல்லாத போது, அவர் ஏன் அப்படி யோசிக்க கூடாது.. அதை நான் மிகவும் நல்ல முறையிலேயே எடுத்துக் கொள்கிறேன். பெரிய ஸ்டார்களை வைத்து மட்டும்தான் படம் இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதும் அவசியம் இல்லாத ஒன்று. மாத்தியும் செய்யலாம்.

ஆகையால் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது மட்டும் இல்லை என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்று எது நடந்தாலும் நான் அவர்கள் பக்கத்திலிருந்து யோசித்துப் பார்ப்பேன்; அவருடைய நியாயங்களை நினைத்துப் பார்ப்பேன். அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு அந்த மார்க்கெட்டை பிடிக்கிறார்கள்; அப்படி இருக்கும் பொழுது அந்த மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமெனவே அவர்கள் விரும்புவார்கள்” என்று பேசினார்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்