ஐயப்ப சாமி கெட்டப்பில் வித்யாசாகர்..நாடி நரம்பெல்லாம் வைப் ஏத்தும் அஷ்ட ஐயப்ப அவதாரம் டைட்டில் பாடல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஐயப்ப சாமி கெட்டப்பில் வித்யாசாகர்..நாடி நரம்பெல்லாம் வைப் ஏத்தும் அஷ்ட ஐயப்ப அவதாரம் டைட்டில் பாடல்

ஐயப்ப சாமி கெட்டப்பில் வித்யாசாகர்..நாடி நரம்பெல்லாம் வைப் ஏத்தும் அஷ்ட ஐயப்ப அவதாரம் டைட்டில் பாடல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 15, 2024 02:05 PM IST

ஐயப்ப சாமி கெட்டப்பில் வித்யாசாகர் தோன்ற, நாடி நரம்பெல்லாம் வைப் ஏத்தும் விதமாக அஷ்ட ஐயப்ப அவதாரம் டைட்டில் பாடல் அமைந்துள்ளது. வித்யாசாகர் இசையமைத்திருக்கும் இந்த பாடல் வைரலாகி வருகிறது.

ஐயப்ப சாமி கெட்டப்பில் வித்யாசாகர்..நாடி நரம்பெல்லாம் வைப் ஏத்தும் அஷ்ட ஐயப்ப அவதாரம் டைட்டில் பாடல்
ஐயப்ப சாமி கெட்டப்பில் வித்யாசாகர்..நாடி நரம்பெல்லாம் வைப் ஏத்தும் அஷ்ட ஐயப்ப அவதாரம் டைட்டில் பாடல்

ஐயப்பசாமி கெட்டப்பில் வித்யாசாகர்

அஷ்ட ஐயப்ப அவதாரம் என்கிற இந்த பக்தி பாடல்கள் அடங்கிய ஆல்பத்தின் டைடட்டில் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பாடலுக்கான வரிகளை திருப்புகழ் மதிவானன் எழுத, பிரபல பாடகர் விஜய் பிரகாஷ் பாடியுள்ளார்.

அத்துடன் பாடலை வித்யாசாகர் பாடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் ஐயப்ப சாமிக்கு மழை அணிந்தவராக கருப்பு உடை அணிந்து, நெற்றியில் பட்டையுடன் தெய்வீக தோற்றத்தில் வித்யாசாகர் தோன்றுகிறார். அத்துடன் அவரது ஸ்கிரீன் பிரெசன்ஸும், நடிப்பும் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

ஐயப்பனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் விதமாக 6 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய இந்த ஐயப்ப பாடல் வேற லெவல் வைப்பை ஏத்தும் விதமாக உள்ளது. ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் தொடங்விருக்கும் நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு மலையிட்டு, விரதம் இருந்து கோயிலுக்கு செல்வது வழக்கம். இந்த நேரத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வித்யாசாகரின் இந்த ஐயப்பன் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விரைவில், வித்யாசாகர் இசையில் இந்த அஷ்ட ஐயப்ப அவதாரம் முழு ஆல்பமும் வெளியிடப்படும் என தெரிகிறது.

பிரபல இசையமைப்பாளர்களின் தெய்வீக பாடல்கள்

சினிமாக்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்கள் பலரும் ஆன்மிகம், தெய்வீக பாடலுக்கும் இசையமைத்துள்ளார்கள். அந்த வகையில் இசைஞானி இளையராஜா, திருவாசகம் பாடல் வரிகளுக்கு சிம்பொனி அமைத்துள்ளார். தேனிசை தென்றல் தேவா, இசை வசந்தம் எஸ்.ஏ. ராஜ்குமார் போன்ற இசையமைப்பாளர்கள் பல்வேறு அம்மன் பாடல் ஆல்பத்துக்கு இசையமைத்துள்ளார்கள்.

இந்த வரிசையில் தற்போது வித்யாசாகரும் இணைந்துள்ளார். சினிமாக்களில் வரும் சாமி பாடலுக்கு, சிச்சுவேஷனுக்கு ஏற்ப பக்தி பாடல்களை இசையமைத்திருப்பதை கடந்த தற்போது முழு ஆல்பமும் தெய்வீக மனம் கமலும் விதமாக பக்தி பாடல்களாக இசையமைத்துள்ளார்.

வித்யாசாகர் படங்கள்

1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த வித்யாசாகர். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாக்களில் பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இதுவரை 225க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள வித்யாசாகர், சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம் பேர் விருதுகளை 5 முறை வென்றுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மலையாள சினிமாவில் பிஸியாக இருந்து வரும் வித்யாசாகர், தமிழில் விமல் நடிப்பில் உருவாகி வரும் தேசிங்கு ராஜா 2 படத்துக்கு இசையமைக்கிறார். இதையடுத்து பக்தி இசை மூலம் புதிய அவதாரமும் எடுத்துள்ளார்.

சமீபத்தில் சத்யராஜ் நடிப்பில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான மை பெர்பெக்ட் ஹஸ்பெண்ட் என்ற வெப்சீரிஸுக்கு இசையமைத்திருந்தார். அத்துடன் இந்த ஆண்டில் வித்யாசாகர் இசையமைப்பில் டபுள் டக்கர், உயிர் தமிழுக்கு ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.