Vidya Balan: தன் பெயரில் போலிக்கணக்கில் பணவேட்டை - நடிகை வித்யா பாலன் போலீஸில் புகார்!
நடிகை வித்யா பாலன் தனது பெயரில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு, திரைத்துறையில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு வருவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

மும்பை: நடிகை வித்யா பாலன் தனது பெயரில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு, திரைத்துறையில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு வருவதாகப் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நடிகை வித்யா பாலன் தனது பெயரில் போலி இமெயில், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கியதாக, போலீசில் புகார் அளித்து சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். மேலும், அடையாளம் தெரியாத மோசடி நபர்கள், இந்த கணக்குகளைப் பயன்படுத்தி திரைத்துறையில் உள்ள நபர்களை அணுகி, வேலை வாய்ப்புகளை வழங்குவதாகச் சொல்லி, ஏமாற்றிப் பணம் பறிப்பதாகப் புகார் தெரிவித்துள்ளார்.
நடிகை வித்யா பாலன், தான் முன்பே பணியாற்றிய வடிவமைப்பாளரிடம் இருந்து தன் பெயரைச் சொல்லி கடந்த ஜனவரி மாதம் பணம் கேட்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளார். முன்னதாக, அந்த வடிவமைப்பாளர் உடனடியாக நடிகை வித்யா பாலனின் பெயரைச் சொல்லி தொடர்பு கொண்டு, பணம் கேட்கும் நபர் குறித்து அறிந்ததும் சம்பந்தப்பட்ட வித்யா பாலனுக்கு போன் செய்து எச்சரிக்கையாக இருக்கும்படி கூறியுள்ளார். அப்போதுதான், இதுபோன்ற போலிக் கணக்குகள் பற்றி அறிந்ததாக நடிகை வித்யா பாலன் கூறினார்.
இதேபோன்ற நடவடிக்கைகள் மின்னஞ்சல் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் மேற்கொள்ளப்படுவது குறித்து வித்யா பாலனுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவரிடம் ஆலோசனை பெற்ற வித்யா பாலன், மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் தன் பெயரைப் பயன்படுத்தி, போலி சமூக வலைதளக் கணக்குகளைப் பயன்படுத்தும் நபர்களின்மீது, மும்பையில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
