Viduthalai: சிவாஜி ரஜினி என்ற இரண்டு லெஜென்ட்கள் போட்டி போட்டு கொண்டு நடித்த படம் விடுதலை! அந்த கால கேங்ஸ்டர் திரைப்படம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Viduthalai: சிவாஜி ரஜினி என்ற இரண்டு லெஜென்ட்கள் போட்டி போட்டு கொண்டு நடித்த படம் விடுதலை! அந்த கால கேங்ஸ்டர் திரைப்படம்

Viduthalai: சிவாஜி ரஜினி என்ற இரண்டு லெஜென்ட்கள் போட்டி போட்டு கொண்டு நடித்த படம் விடுதலை! அந்த கால கேங்ஸ்டர் திரைப்படம்

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 11, 2024 06:00 AM IST

Viduthalai: சமீபத்தில் வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி நடித்து வெளியான விடுதலை திரைப்படம் இன்றைய தலைமுறையினரையும் அன்றைய 1986 விடுதலை குறித்தும் பேச வைத்து விட்டது. கே.விஜயன் இயக்கத்தில் ஆரூர்தாஸ் வசனத்தில் சிவாஜியும் ரஜினியும் போட்டி போட்டுக்கொண்டு நடித்த படம்!

சிவாஜி ரஜினி என்ற இரண்டு லெஜென்ட்கள் போட்டி போட்டு கொண்டு நடித்த படம் விடுதலை! அந்த கால கேங்ஸ்டர் திரைப்படம்
சிவாஜி ரஜினி என்ற இரண்டு லெஜென்ட்கள் போட்டி போட்டு கொண்டு நடித்த படம் விடுதலை! அந்த கால கேங்ஸ்டர் திரைப்படம்

சிவாஜி கணேசன் கம்பீரமிக்க காவல்துறை அதிகாரி ராஜசிங்கமாகவும் ரஜினி திருடுவதில் வல்லவரான ராஜாவாகவும், விஷ்ணுவர்த்தன் அமரனாகவும், மாதவி ராதாவாகவும், விஜயகுமார் விக்ரமாகவும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் கே.பாலாஜி தேங்காய் சீனிவாசன் சுதர்சன் அனுராதா ஒய்.ஜி.மகேந்திரன் பிந்துகோஷ் பேபி ஷாலினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாடல்கள் மூலம் இந்தியா முழுவதும் ஹிட் அடித்த இந்தி மொழி திரைப்படத்தின் தமிழ் வெர்ஷன் தான் இந்த விடுதலை திரைப்படம். அந்த படத்தில் பெரோஸ்கான் நடித்த பாத்திரத்தில் ரஜினியும் அம்ஜத்கான் பாத்திரத்தில் சிவாஜி கணேசனும் நடித்திருந்தனர்.

திருட்டு தொழிலில் சாதுர்யம் ஆக ஈடுபட்டு வரும் ரஜினியை கிளப்களில் டிஸ்கோ நடனமாடி பாடி வருகிற மாதவியை காதலிக்கிறார். காதலிப்பவளுக்கு தன் காதலன் திருடன் என்று தெரியாது. அண்ணன் தங்கை யாக வரும் விஜயகுமார் அனுராதா இருவரும் தங்களை ஏமாற்றி விட்ட முதலாளி சுதர்சனிடம் உள்ள பணத்தை கொள்ளையடிக்கும் பொறுப்பை ரஜினியிடம் தருகின்றனர். 

ஆனால் ரஜினி யின் கொள்ளையடிக்கும் திட்டத்தை காவல்துறை அதிகாரி சிவாஜி கணேசன் முறியடித்ததோடு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று தருகிறார். இதை கண்டு மாதவி அதிர்ச்சி அடைகிறார். மறுபுறத்தில் சுதர்சனுக்கு எதிராக அமர் திரும்புகிறார். அமருடைய மகள் ஒரு பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறார். ரவுடி கும்பல் ஒன்றிடம் இருந்து ராதாவை காப்பாற்றுகிறார். ராதாவுக்கு அமரின் மகளை பிடித்துப்போக அடிக்கடி சந்தித்து கொள்கின்றனர். 

அமருக்கும் ராதா மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது. ஆனால் ராதா வின் சிந்தனை எல்லாம் ராஜா மீதே உள்ளது. அமரும் புரிந்து கொண்டு அமைதி காக்கிறார். இந்த நிலையில் சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்து விக்ரமை சந்தித்து பேசுகிறார். இந்த நிலையில் அங்கு வரும் அமருக்கும் விக்ரம் தரப்புக்கும் கைகலப்பு ஏற்படுகிறது. அமரை பழிவாங்கும் முடிவுக்கு விக்ரம் வருகிறார். 

ராஜா அமர் இடையே ஆகும் அறிமுகம் ராதாவை அமருக்கும் அறிமுகம் செய்கிறார். அமருடைய மகள் விக்ரம் தரப்பில் கடத்தப்படுகிறார். விக்ரமுக்காக சுதர்சனிடம் கொள்ளை அடிக்க ராஜா சம்மதிக்கிறார். அமரையும் துணைக்கு சேர்த்து கொண்டு வெளிநாடு செல்ல திட்டமிடுகின்றனர். ஒரு கட்டத்தில் ராஜா, அமருக்கும் எதிராக விக்ரம் திரும்புகிறார். முடிவில் எல்லா முடிச்சுகளையும் சரி செய்து கதை சுபமாக நிறைவடையும்.

படத்தில் சந்திரபோஸ் துள்ளல் ஆக இசை அமைத்து இருப்பார்.

"நாட்டுக்குள்ள நம்மை பத்தி"

"ராஜாவே ராஜா"

"நீல குயில்கள் ரெண்டு"

"தங்கமணி ரங்கமணி"

"ராகம் நானே" என்று பாடல்களில் இசை ஆர்ப்பரிக்கும்.

மொத்தத்தில் இது அந்த கால கேங்ஸ்டர் திரைப்படம். மொத்தத்தில் ரஜினியின் ஸ்டைல், சிவாஜியின் நடிப்பு, கவர்ச்சியாக மாதவி , துறுதுறு பேபி. ஷாலினி என்று எல்லாம் கலந்து கொடுத்த அந்த காலத்து மசாலா ரசிகர்களுக்கு மனதில் இனித்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.